சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சொத்துக்காக தீயாய் வேலை செய்யும் குணசேகரன் கதிர்.. வாய்சவடால் மட்டும் விடும் ஜனனி

ஆரம்பத்தில் விரும்பிப் பார்த்த எதிர்நீச்சல் சீரியல் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக போர் அடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் இந்த கதைக்கு ஏற்ற மாதிரி இந்த வீட்டு மருமகள்கள் சுயமாக எந்த விஷயமும் செய்யாமல் இன்னும் குணசேகரனுக்கு அடிமையாக இருப்பது தான் பார்க்கவே எரிச்சல் ஊட்டுகிறது. அதிலும் ஜனனி பெரிய சிங்கப்பெண் மாதிரி வந்த வேகத்துக்கு குணசேகரன் உண்டு இல்லன்னு ஆக்குவார் என்று பார்த்தால் சும்மா வாயாலேயே வடை சுட்டுட்டு இருக்காங்க.

என்னதான் ஜனனி, குணசேகரனுக்கு எதிராக நின்றாலும் ஒவ்வொரு முறையும் ஏதாவது தில்லாலங்கடி வேலையை செய்து ஜெயித்துக் கொண்டே தான் இருக்கிறார். இந்த முறையும் அப்பத்தாவை ஆஸ்பத்திரியில் இருந்து அவருடைய இடத்திற்கு மாற்றிவிட்டார். ஜனனி எவ்வளவு தடுத்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் வழக்கம் போல் புலம்பிக்கொண்டே இருக்கிறார். இன்னொரு பக்கம் சக்தி முடிந்தவரை கதிரிடம் சண்டை போட்டு பார்த்தார் அதுவும் பிரோஜனம் இல்லாமல் போய்விட்டது.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

பின்பு குணசேகரன் அப்பத்தாவை அவருடைய இடத்தில் வைத்துக் கொண்டு அவரை பார்ப்பதற்காக தனியாக ஒரு நர்சை போட்டுவிட்டார். அந்த நர்ஸ் இடம் என்னுடைய அப்பத்தா உயிர் அவரு உடம்பில் இல்லை உன் கையில் தான் இருக்கிறது என்ற சொல்கிறார். அதற்கு அந்த நர்ஸ் நான் ரொம்ப நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என்று கூற அதற்கு குணசேகரன் ரொம்பல்லாம் நல்லா பாத்துக்க வேண்டாம் ஓரளவுக்கு பாத்துக்கிட்டா போதும் என்று நக்கலாக சொல்கிறார்.

இவர் செய்யும் தில்லாலங்கடி வேலைக்கு பக்க பலமாக இருக்கிறது கதிர் தான். இவருக்கும் கதிருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பிரச்சனை வந்து அதனால் குணசேகரன் கதிரை விட்டு போனால் மட்டும்தான் கொஞ்சமாவது அடங்குவார். அடுத்ததாக இந்த ஞானம் அவரது குணசேகரன் எதிர்த்துப் பேசியதோடு இல்லாமல் இன்னும் கொஞ்சம் சூடு சொரணை இருக்கிற மாதிரி சண்டை போட்டா குணசேகரன் அடங்கிப் போவார்.

Also read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

ஆனால் அப்படி இல்லாமல் ஏதோ எல்லாரும் சேர்ந்து குணசேகரன் கிட்ட பேச போகிற மாதிரியும் பிறகு அவர் எல்லாத்தையும் பணத்தை காட்டி வாயை மூட வைக்கிறது இப்ப வர தொடர்ந்து அதுதான் நகர்ந்து கொண்டு வருகிறது. இதற்கிடையில் அப்பத்தா சொன்ன ஜீவானந்தம் யார் என்று சீக்கிரத்தில் ஜனனி கண்டுபிடித்தால் இன்னும் கூட விறுவிறுப்பாக போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன் குணசேகரன் அப்பதாவை ஆஸ்பத்திரியில் இருந்து அவருடைய வீட்டிற்க்கே கொண்டு வந்து விட்டார். இங்க வைத்து தான் மருத்துவம் பார்க்கப் போகிறார் என்றால் கண்டிப்பாக அப்பத்தாவுக்கு வேறுவிதத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் இது தெரியாமல் ஜனனி மற்றும் சக்தி அப்பத்தாவை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் தீர்வாக ஜீவானந்தம் வந்தால் மட்டும் தான் எல்லாத்துக்கும் முடிவாக இருக்கும்.

Also read: அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி

- Advertisement -

Trending News