குணசேகரன் சதியில் சிக்காத ரேணுகாவின் எஜமான்.. சர்வாதிகாரின் கொட்டத்தை அடக்க மருமகள்களுக்கு பிறந்த விடிவுகாலம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஞானம் யாரிடம் பணம் வாங்கி இருக்கிறார் என்று தெரிந்த குணசேகரன் அதிலும் ஆட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டார். அதாவது கடன் கொடுத்த நபரை வீட்டுக்கு வரவைத்து அனைவரது முன்னணியிலும் ஞானத்தை அவமானப்படுத்தி விட்டார். இதை எதிர்பார்க்காத ரேணுகா மற்றும் நந்தினி நாங்கள் வந்து உங்க அண்ணனிடம் பேசுகிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

ஆனாலும் குணசேகரன் இதுதான் சான்ஸ் என்று மொத்த பேரையும் அவமானப்படுத்தி பேசுகிறார். பிறகு நந்தினி ரேணுகா கடன் கொடுத்த வீட்டிற்கு போகிறார்கள். அங்கே இருந்த நபரிடம் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் உங்களுடைய பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்கிறார்கள்.

அதற்கு அந்த நபர் அப்படி எல்லாம் தர முடியாது. நீங்கள் குணசேகரன் வீட்டில் இருந்தும் ஏன் இந்த கடனை வாங்கி இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு நந்தினி எங்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டார். பிறகு ரேணுகா நான் டான்ஸ் கிளாஸ் நடத்தி அதன் மூலம் வரும் பணத்தை வைத்து உங்கள் கடனை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறார்.

ஆடு புலி ஆட்டம் ஆடப்போகும் மருமகள்கள்

அதற்கு கடன் கொடுத்த நபர் அப்படி என்றால் என்னிடம் இருக்கும் இடத்தில் நீங்கள் டான்ஸ் கிளாஸ் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதற்கு ஒரு கண்டிஷன் அது என்னுடைய அம்மாவின் பெயரில் வைத்து துவங்க வேண்டும். அந்த இடத்தில் நீங்க ஒரு டீச்சராக வேலை பார்த்தால் போதும். அதற்கு என்ன சம்பளமோ அதை நான் மாதம் தருகிறேன் என்று கூறுகிறார்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய குழந்தைக்கும் அவர்களுடைய தோழிகளுக்கும் நீங்கள் ஃப்ரீயா டான்ஸ் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு யோசித்த ரேணுகாவிடம் நாளை 5:00 மணி வரை உங்களுக்கு டைம் இருக்கிறது. அதற்குள் யோசித்து ஒரு முடிவை சொல்லுங்கள் என்று அனுப்பி வைக்கிறார்.

பிறகு வீட்டிற்கு வந்து அந்த ஆளுடன் சேர்ந்து இந்த மாதிரி ஒரு வேலை பார்க்கவா வேண்டாமா என்று மொத்த பேரும் இருந்து கலந்து ஆலோசிக்கிறார்கள். அப்பொழுது ஞானம் இதெல்லாம் சரிப்பட்டு வராது. அந்த ஆளுடன் எந்த சகவாசமும் நமக்கு வேண்டாம் என்று சொல்கிறார். உடனே தர்ஷினி எங்க அப்பாவை விட மோசமான ஆளா இருப்பாரு என்று கேட்கிறார்.

இவ்வளவு தெளிவா பேசும் தர்ஷினி ஏன் இன்னும் வாயை மூடிக்கொண்டு குணசேகரை பற்றி சொல்லாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை. தன்னை கடத்திட்டு போய் வைத்தது குணசேகரன் தான் என்று சொல்லாமல் மறைத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஜனனி வேலை பார்க்கும் ஆபீஸில் சூப்பர்வைசர் வேலையில் சக்தியும் சேர்ந்து விடுகிறார்.

அந்த வகையில் ஏதோ ஒரு விதத்தில் ஜனனி சக்தி கைக்கு பணம் கிடைப்பதற்கு வழி வகுத்து விட்டார்கள். அத்துடன் நந்தினி மொய் விருந்தில் கிடைத்த பணத்தை வைத்து வியாபாரம் பண்ணுவதற்கு தயாராகி விட்டார். மேலும் ரேணுகாவும் டான்ஸ் கிளாஸ் வைப்பதற்கு முடிவு பண்ணி விட்டார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி கல்லூரியில் சேர வாய்ப்பு இருக்கிறது.

ஆக மொத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குணசேகரன் வீட்டு பெண்கள் சொந்த காலில் நிற்பதற்கு அஸ்திவாரத்தை போட்டு விட்டார்கள். இனி குணசேகரின் சர்வாதிகாரத்தை அடக்கும் வழியில் மருமகள் ஒவ்வொருவரும் ஆடு புலி ஆட்டத்தை ஆடப்போகிறார்கள். அத்துடன் ஈஸ்வரியும் விவாகரத்து கேட்டு குணசேகரன் கோர்ட்டுக்கு அலைய வைக்கப் போகிறார்.

இதனால் குணசேகரனுக்கு இருந்த கொஞ்ச நெஞ்சம் மானமும் காற்றில் ஊசல் ஆட போகிறது. தற்போது பழைய மடி பாமுக்கு வருவது போல் கதை சுவாரசியமாக அமைந்து வருகிறது. இதை இப்படியே தொடர்ந்து கொண்டு வந்தால் டி ஆர் பி ரேட்டிங்கில் முன்னுக்கு வந்துவிடும்.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -