Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், சித்தார்த்தை காணவில்லை என்றதும் குணசேகரன் தர்ஷினியை அவர்களுடைய இடத்திற்கு கூட்டிட்டு போய் விட்டார். இது தெரியாமல் ஈஸ்வரி, தர்ஷினியை தேடிக் கொண்டு வீட்டில் அழைக்கிறார். பிறகு குற்றவைக்கு போன் பண்ணி தர்ஷினியை காணவில்லை என்ற தகவலை கொடுக்கிறார்.
உடனே குற்றவை, நான் ட்ராக் பண்ணி கண்டுபிடிக்கிறேன். நீங்கள் உடனே என்னுடைய வீட்டிற்கு வாருங்கள் என்று கூப்பிடுகிறார். இன்னொரு பக்கம் நந்தினி மற்றும் ரேணுகா சாப்பாட்டுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு தனியாக போய் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் சித்தார்த்தை தேடிக்கொண்டு மோப்பம் பிடித்து வந்த ராமசாமி காரில் இருந்த கரிகாலன், ரேணுகா நந்தினியை பார்த்து விடுகிறார்.
உடனே ராமசாமி இடம் சொல்லி இவர்களை தனியாக ஃபாலோ பண்ணி நான் போகிறேன். அதன் மூலம் சித்தார்த் எங்கே இருக்கிறார் என்ற தகவல் கிடைத்து விடும். உடனே நான் உங்களுக்கு போன் பண்ணி சொல்கிறேன். நீங்கள் போலீஸ் மூலம் அந்த இடத்திற்கு வந்து விடுங்கள் என்று கரிகாலன் ராமசாமி இடம் சொல்கிறார்.
வாயை திறக்க போகும் சித்தார்த்
அதன்படி ரேணுகா மற்றும் நந்தினியை பாலோ பண்ணிய கரிகாலனுக்கு இருக்கும் இடம் தெரிந்து விட்டது. உடனே ராமசாமிக்கு தகவல் சொல்லியதும் போலீசார் அந்த இடத்திற்கு போய் விடுகிறார்கள். அத்துடன் சித்தார்த்தை கூட்டிட்டு வரும் பொழுது ஜனனி, அவனுக்கு இஷ்டப்படி கல்யாணம் பண்ணி வைப்பதற்காக தான் நாங்கள் இங்கே இருக்கிறோம் என்று சொல்கிறார்.
அதற்கு போலீசார் சித்தார்த்திடம் நீ முழு சம்மதத்துடன் தான் இவர்களுடன் இருக்கிறாயா என்று கேட்கிறார். இதற்கு வழக்கம் போல் சித்தார்த் வாயை மூடிக்கொண்டே இருக்கிறார். ஆனால் இங்கேதான் ஒரு திருப்பம் ஏற்படப் போகிறது. அதாவது இதுவரை வாய் மூடிக்கொண்டு இருந்த சித்தார்த் முதல் முறையாக நான் அஞ்சனாவை காதலிக்கிறேன்.
அவளை கல்யாணம் பண்ணுவதற்காக தான் நான் இங்கே என் இஷ்டப்படி வந்து இருக்கிறேன் என்று சொல்லப்போகிறார். அதன்படி இவர்கள் பிளான் பண்ண படி கல்யாண வேலைகள் நடக்கப்போகிறது. ஆனால் இப்படி எல்லாம் நடக்கும் என்று தான் குணசேகரன் தர்ஷினியை கூட்டிட்டு போய் பிளாக்மெயில் பண்ண போகிறார்.
ஆனால் தர்ஷினி அவளுடைய வாழ்க்கையே காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் குணசேகரனுக்கு எதிராக திரும்பப் போகிறார். இந்த ஒரு விஷயம் குணசேகரனுக்கு மிகப்பெரிய ஆபத்தாக திரும்ப போகிறது. கடைசியில் கதிர் உதவியுடன் ஜனனி டீம் வெற்றியை பார்க்கப் போகிறார்கள்.