எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

எதிர்நீச்சலில் அதிரடி திருப்பங்களுடன் குணசேகரன் செய்யும் அட்டூழியம் சமாளிக்க முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பேசி காய் நகர்த்துகிறார் குணசேகரன். ஆனால் இவரை முழுவதுமாக நம்பாமல் ஜனனி மட்டும் கொடி பிடித்து வருகிறார்.

எல்லோரிடமும் டபுள் கேம் ஆடி மாட்டிக் கொள்கிறார் குணசேகரன். தங்கச்சி கல்யாண விஷயத்தில் ஜான்சி ராணி இடம் கரிகாலன் தான் என் மருமகன் என்று கூறுகிறார். ஆனால் எஸ் கே ஆர் தம்பி அரசுவிடம் சம்மந்தம் பேசுகிறார். குணசேகரின் மொத்த குடும்பமும் இவரது சூழ்ச்சி நாடகம் தெரியாமல் முழிக்கிறது.

Also read: எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.. 14 வருடங்களுக்கு பின் வெளிவர உள்ள 2ம் பாகம்

எஸ் கே ஆர் குடும்பத்திடம் சம்மந்தம் பேசுவதை அறிந்த ஜான்சி ராணியும், கரிகாலனும் குணசேகரன் சட்டையை பிடித்த உடன் பழைய பிளாஷ்பேக் கதையை கூறுகிறார் குணசேகரன். அதாவது எஸ் கே ஆர் வீட்டில் தான் வேலை செய்யும்போது அவரிடம் தொழில் கத்துக்கிட்டதாக தெரிவிக்கிறார்.

அந்த பருவ வயதில் சாரு பாலாவை தான் காதலித்ததாகவும்,.இதனை எஸ் கே ஆர் இடம் சொல்லி சாரு பாலாவை பெண் கேட்டதாகவும் பழைய கதைகளை கூறுகிறார். ஆனால் தன்னை சாரு பாலா வெறுத்ததாகவும், தான் படிக்காதவன், அழகில்லாதவன், தகுதி இல்லாதவன் என்று தன்னை வெறுத்து விட்டதாகவும் தெரிவிக்கிறார்.

Also read: தேங்காய் மண்டையனை போட்டுத் தள்ள துடிக்கும் சவுண்ட் சரோஜா.. அப்பத்தா, எஸ்கேஆர் க்கும் வலை விரித்த குணசேகரன்

இப்படி போய்க்கொண்டிருந்த போதே, திடீரென எஸ் கே ஆர், சாருபாலாவை திருமணம் செய்து கொண்டு தனக்கு துரோகம் செய்து விட்டதாக குணசேகரன் கூறுகிறார். அதற்குபழிக்குப் பழி வாங்கவும் அந்த குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்க திட்டம் போடுகிறேன் என ஜான்சி ராணி இடம் கதைகளை அவிழ்த்து விடுகிறார்.

அதன் பின்னர் திடீரென குணசேகரன் வீட்டிற்கு வந்து அதிர்ச்சி கொடுக்கிறார் சாருபாலா. வந்தவுடன் பழைய எக்ஸ் லவ்வரை பார்த்தவுடன் வாயை பிளக்கிறார் குணசேகரன். ஆனால் குணசேகரனை மூளை இல்லா முட்டாள் என சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடி வசை பாடுகிறார் சாருபாலா.

Next Story

- Advertisement -