நந்தினியிடம் பல்பு வாங்கிய குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் மருமகள் அடிக்கும் கூத்து

அனைத்து சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி தற்போது அதிகமாக பார்த்து வரும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். அதற்கு முக்கிய காரணம் என்னதான் கதை விறுவிறுப்பாக இருந்தாலும் இதில் அதிகமாக பேசப்பட்டு பார்த்து ரசிக்கக்கூடிய கேரக்டர் என்றால் குணசேகரன். இந்த கேரக்டருக்கு வேறு யார் வந்தாலும் இவருக்கு ஈடாகாது என்று சொல்லும் அளவிற்கு முகபாவனையும் எதார்த்தமான நடிப்பையும் கொடுத்து வருகிறார்.

அடுத்ததாக இன்னொருவர் கதாபாத்திரத்தையும் சொல்லலாம். என்னதான் திருமண வாழ்க்கை சரியாக அமையாவிட்டாலும் இவருடைய டைமிங் காமெடியை அடிச்சதுக்கு யாரும் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு கேரக்டர் தான் நந்தினி. முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு குணசேகரனை கேலி கிண்டல் செய்யும் மிகப் பெரிய திறமை இவரிடம் இருக்கிறது. அப்படி குணசேகரனை என்ன பண்ணி இருக்கிறார் என்று பார்க்கலாம்.

Also read: ஆதிரையின் நிச்சயதார்த்தம் நடக்குமா இல்லையா? கருப்பு ஆடு குணசேகரன் சிக்குவாரா!

அதாவது இந்த சீன் எல்லாம் நாடகத்தில் பார்க்கும்போது பக்கத்தில் இருப்பவர்களை பற்றி யோசிக்காமல் விழுந்து விழுந்து சிரிச்சதெல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது. அதில் குணசேகரன் எப்பொழுதும் போல மருமகளிடம் காபி கொஞ்சம் கூடுமா என்று கேட்க அதற்கு நந்தினி இந்த ஆளுக்கு மட்டுமே 40 ஆயிரம் காப்பி கொடுத்து இருப்பேன் என்று குணசேகரனை கலாய்த்திருப்பார்.

அடுத்ததாக ஆதிரைக்கு நந்தினி மாம்பழ ஜூஸ் கொண்டு போகும்போது குணசேகரன் இது என்னது மா என்று கேட்க அதற்கு மாம்பழ ஜூஸ் மாமா என்று சொல்ல உடனே குணசேகரன் நான் மாம்பழ ஜூஸ் எல்லாம் குடிக்க மாட்டேன் அது சூடுமா என்று சொல்ல அதற்கு நந்தினி இது உங்களுக்கு இல்ல மாமா ஆதிரைக்கு தான் என்று செம நோஸ்கட் கொடுத்திருப்பார்.

Also read: கோபியை குழப்பிவிடும் அம்மா.. பதறிப் போய் பாக்யாவிடம் வாய் கொடுத்து மூக்குடைந்த ராதிகா

அடுத்து அப்பத்தா அந்த 40% சொத்தை என்னதான் பண்ணப் போகிறார் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். நான் என்ன எனக்காகவா கேட்கிறேன் உங்களுக்காக உங்க குடும்பத்துக்காக உங்க பசங்களுக்கு தானே கொஞ்சம் அசந்தம்னா கை மீறி போகிறோம் என்று சீரியஸாக சொன்ன குணசேகரனிடம் நந்தினி மற்றும் ரேணுகா தலையை ஆட்டிக் கொண்டு ஆமாம் மாமா ஆமாம் மாமா என்று சொல்லி நக்கல் அடித்திருப்பார்.

பின்பு குணசேகரின் மனைவி ஈஸ்வரிடம் எப்படிக்கா இந்த மாதிரி மோசமான ஆளோட எப்படி வாழ்ந்தீங்க, வாழ்கிறீங்க என்று தெரியவில்லை ஆனால் சத்தியமா சொல்றேன் உங்களுக்கு ஒரு கோயில் கட்டி தான் கும்பிடணும் என்று குணசேகனை பங்கமாய் கலாய்த்திருப்பார்.

Also read: அனாதையாக சுற்றி திரிய போகும் கோபி.. ராதிகா எடுக்கும் அதிரடி முடிவு

- Advertisement -