ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குணசேகரனுக்கும் கதிருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்.. உங்களால் எதையுமே பிடுங்க முடியாது என்று சொல்லிய தம்பி

ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு நிறைந்த சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். ஆளுக்கு ஆள் சொத்துக்காக பிளான் போட்டு ஆதிரையின் நிச்சயதார்த்தத்தை பகடைக்காயாக யூஸ் பண்ணிக்கிறாங்க. இதில் யாருடைய பிளான் ஒர்க் அவுட் ஆகும் என்பது கேள்வி குறியாக இருக்கிறது. இந்நிலையில் நிச்சயதார்த்தத்திற்காக குணசேகரன் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் மண்டபத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் கதிர் அதிகப்படியான கோபத்தில் இருப்பதால் பங்க்ஷனில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கிறார். இவரை குணசேகரன் மற்றும் ஞானம் எவ்வளவு சமாதானம் செய்தாலும் வர மறுத்து விடுகிறார். இதனால் குணசேகரன் மற்றும் கதிருக்கு வாக்குவாதம் ஆகிறது. அதில் குணசேகரன் நான் எஸ்கேஆர் இடம் சொத்தை பிடுங்குவதற்காக தான் இந்த அளவுக்கு இறங்கி போகிறேன். இதை புரிஞ்சுக்காம இந்த மாதிரி வீம்பு பண்ணிக்கிட்டு இருக்க அப்படின்னு சொல்கிறார்.

Also read: எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

இதற்கு கதிர் உங்களால ஒன்னும் பிடுங்க முடியாது அவன் தான் நம்ம கிட்ட இருந்து பிடுங்கிட்டு இருக்கான் அது கூட தெரியாம லூசுத்தனமா பேசிகிட்டு இருக்கீங்க என்று குணசேகரனை பார்த்து சரமாரியாக கேள்வி கேட்கிறார். உடனே குணசேகரன், அண்ணன் என்ன பண்ணாலும் சரியாகத்தான் இருக்கும். அதை கூட புரிஞ்சுக்காம இருக்க யாரும் மண்டபத்துக்கு போக வேண்டாம் வீட்டிலேயே இருக்கலாம். என்று கோபத்துடன் பேசிட்டு என்ன ஆள விடுங்க தங்கச்சி கல்யாணத்துக்கு தண்டல்காரனை கெஞ்சலாம், கூடவே பிறந்த தம்பியுமா கெஞ்ச முடியும் என்று போய்விட்டார்.

ஆனாலும் இறுதியில் கதிர் நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான் என்று பிடிவாதமாக ரூம்குள் போய்விட்டார். அடுத்ததாக மண்டபத்தில் வசு ஆதிரைக்கு அலங்காரம் செய்வதற்காக வருகிறார். அப்பொழுது அங்கிருந்த வசு, நந்தினியை பார்த்து சும்மா கிண்டலாக பேசும் பொழுது நந்தினி எல்லாரும் என்னை மட்டம் தட்டி பேசுகிறீர்கள் என்னுடைய வேதனை எனக்கு மட்டும்தான் புரியும் உங்களுக்கு கிண்டலாக இருக்குதா என்று உணர்ச்சிவசப்பட்டு வசுவிடம் பேசுகிறார்.

Also read: எஸ் கே ஆரின் தம்பி மூலம் காய் நகர்த்தும் அப்பத்தா.. குணசேகரனை பழிவாங்க நினைக்கும் அரசு

பின்பு மண்டபத்தில் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஆதிரை வந்த பொழுது அங்கே எல்லாரும் கவலைகளை மறந்து சகஜமாக சிரித்துப் பேசுகிறார்கள். அதிலும் மீனாட்சி அம்மா இப்பதான் புதுசா கல்யாணமான பொண்ணு மாதிரி வெட்கப்பட்டு அவங்களுக்கு நடந்த கல்யாணத்தை பற்றி கூறுகிறார். தொடர்ந்து அங்கே அனைவரும் ஜாலியாக இருக்கிறார்கள்.

அடுத்ததாக மண்டபத்திற்கு எஸ்கேஆர் ஃபேமிலி அனைவரும் வருகிறார்கள். இவர்கள் அங்கே இருப்பவர்களிடம் எதார்த்தமான பேச்சை கொடுத்து ஒருத்தரை ஒருத்தர் அறிமுகம் செய்து கொள்கிறார்கள். இதற்கிடையில் ஆதிரை திருமணம் அவர் நினைத்தபடி நடக்குமா இல்லை குணசேகரன் பிளான் படி கரிகாலன் கூட நடக்குமா என்று பெரிய போராட்டத்துடன் இருக்கிறது.

Also read: ரஞ்சித்தை பார்த்து காண்டாகிய கோபி.. மனதிற்குள்ளே புலம்பித் தவித்த நிலைமை

- Advertisement -

Trending News