சர்வைவரில் போராடி ஜெயித்தது யார் தெரியுமா.? இணையத்தில் கசிந்த கிராண்ட் பினாலே சீக்ரெட்

18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சியில் தற்போது உமாபதி, விஜயலட்சுமி, சரண், ஐஸ்வர்யா, இனிகோ, அம்ஜத், வனிஷா,நாராயணன் ஆகிய எட்டு பேர் தற்போது இறுதி போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சர்வைவர் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே வாரம் என்ற பெயரில் போட்டியாளர்களுக்கு கடுமையான கொடுக்கப்பட உள்ளது.

அத்துடன் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘பெஸ்ட் ஆப் சர்வைவர்’ என்ற பட்டத்துடன் சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:30 மணி முதல் 6:30 வரை சர்வைவர் பினாலே டாஸ்க் நடைபெற உள்ளது.

எனவே சான்சிபார் என்ற தீவில் நடத்தப்படும் இந்த டாஸ்க் மூலம் யார் வெற்றி பெறுகிறார்களோ? அவர்கள் யார் என்பதை ஞாயிற்றுக்கிழமை இரவு 8:30 மணி அளவில் நேரலையின் மூலம் ஜீ தமிழ் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இருப்பினும் சர்வைவர் நிகழ்ச்சியின் வெற்றியாளர் விஜயலட்சுமி என்று ஏற்கனவே தகவல்கள் இணையத்தில் கசிந்து விட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளராக கலந்துகொண்ட விஜயலட்சுமி சில நாட்களிலேயே வெளியேறிவிட்டார்.

பிக்பாஸில் விட்டதை சர்வைவரில் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சர்வைவர் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாள் முதலே கடுமையாக போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்த நிகழ்ச்சியில் தன்னை நிலைநாட்டிக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் நடிகையாக பார்த்த விஜயலட்சுமியை சர்வைவல் நிகழ்ச்சிக்குப் பின் விஜயலட்சுமிக்கு ரசிகர்களிடையே நல்ல பெயரும் புகழும் கிடைத்துவிட்டது. இருப்பினும் கிராண்ட் பினாலே அன்று நடத்தப்படும் விறுவிறுப்பு குறையாத டாஸ்க்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்