ஏஆர் ரகுமானால் லியோ ஆடியோ லாஞ்சுக்கு பறக்கும் கட்டளை.. மறைமுகமாக உதயநிதி கொடுக்கும் நெருக்கடி

விஜய் படத்தின் ஆடியோ லான்ச் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாளாக இருக்கும். எந்த நடிகரும் செய்யாத செயல் ஆடியோ லாஞ்சை பெரிய அளவில் நடத்தி அதில் ஒரு குட்டி ஸ்டோரி சொல்வது விஜயின் வழக்கமாக கொண்டு வந்தார். அதில் அரசியலும் பேச தொடங்கினார்.

லியோ படத்தின் ஆடியோ லான்ச் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி நடக்க விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கிறது. இதற்கான வேலை வேகமாக நடைபெற்றாலும் அரசாங்கத்திடமிருந்து எந்த ஒப்புதலும் இதுவரை வரவில்லையாம். இதற்கு காரணம் அரசியல் காரணங்கள் இல்லை. ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி ஏற்படுத்திய குழப்பமே இதற்கு காரணம்.

Also Read : மதத்தை ஒழிக்க விஜய்யின் அப்பா செய்த வேலை.. ஆனா தன்னை வேறுமாறி அடையாளப்படுத்தும் தளபதி

அப்படியே இந்த விழா நடப்பது உறுதிப்படுத்தப்பட்டால் ரசிகர்களுக்கு அழைப்பு கிடையாதாம் தமிழ்நாட்டில் இருந்து எந்த ரசிகரும் வரக்கூடாது. விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என விஜய் கூறியிருக்கிறாராம். இதற்கு காரணம் எந்த அசம்பாவிதமும் ஏற்பட்ட விடக்கூடாது என்பதற்காக.

என்னதான் விஜய் சொன்னாலும் ரசிகர்கள் கேட்க போறதில்லை அவர்கள் எப்படியோ வந்து நின்று கூட்டத்தைக் கூட்டி ஏதோ ஒரு பிரச்சனை செய்யத்தான் போகிறார்கள். அதேபோல் பத்திரிகையாளர்கள, தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று யாருக்குமே அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. விஜய் எப்படியும் அரசியல் பேசுவார் என்ற ஆர்வமும் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.

Also Read : விஜய்யை மதிக்காமல் பேராசையில் டாப் ஹீரோவை சந்தித்த சஞ்சய்.. உனக்கு வயசு பத்தல என திருப்பி அனுப்பிய சோகம்

இது போதாது என்று தமிழ்நாட்டில் லியோ படத்திற்கு அதிகாலை காட்சி கண்டிப்பாக கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவும் இந்த படத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாக தான் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கண்டிப்பாக வசூல் குறைய கூடும் என்று கூறப்படுகிறது.

லியோ என்ற பெரிய படத்தில் நடித்த விஜய் இதில் சந்திக்கும் பிரச்சனைகள் ஆடியோ லான்ச் பார்க்க முடியாமல் ரசிகர்களுக்கு ஏற்படும் வருத்தம் மற்றும் அதிகாலை காட்சி இல்லாமல் இருப்பதும் ரசிகர்களுக்கு வருத்தம் இருந்து வருகிறது. அரசியல் பயணமும் இந்த படத்தில் இருந்து தொடங்குவதால், அரசின் கட்டளையாக இருந்தாலும் இது மறைமுகமாக விஜய்க்கு உதயநிதி கொடுக்கும் குடைச்சல் எனவும்  திரையுலகத்தில் பேசப்படுகின்றது.

Also Read : விஜய்க்கு பாய் சொல்லிட்டு திருமணத்திற்கு ஓகே சொன்ன திரிஷா.. அக்கட தேசத்தில் இருந்து வரும் புது மாப்பிள்ளை