அப்பாவை விட மோசமாகும் மகன்களின் வாழ்க்கை.. கோபிக்கு வந்த ஹார்ட் அட்டாக்

Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது புதிய திருப்பம் ஒன்று அரங்கேறி இருக்கிறது. அதாவது கோபி தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இப்போது படாத பாடு பட்டு வருகிறார். இப்போது அவரின் பிள்ளைகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் அளவுக்கு தலைகீழாக மாறிவிட்டது.

அதாவது மூத்த மகன் செழியன் பொண்டாட்டி ஜெனி இருக்கும் போது மாலினி என்ற பெண்ணுடன் பழகி வருகிறார். இப்போது மாலினியின் முகத்திரை கிழிந்தாலும் அவரிடமிருந்து விலக முடியாமல் சிக்கலில் மாட்டியிருக்கிறார். போதாக்குறைக்கு மாலினி இப்போது வீடு வரைக்கும் வர ஆரம்பித்து விட்டார்.

செழியனின் வாழ்க்கை தான் இப்படி இருந்தால் கண்ணியமாக நடந்து கொள்ளும் எழிலின் வாழ்க்கையிலும் சூறாவளி காற்று சுழன்று அடிக்கிறது. கணவனை இழந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க துணிந்த எழில் இப்போது பெரும் பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். இதுவரை அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் இறந்ததாக நினைத்த நிலையில் உயிருடன் வந்து விட்டார்.

அவரும் இப்போது அமிர்தாவை தேடி பாக்கியலட்சுமி வீட்டுக்கு வர ஆரம்பித்து விட்டார். இவ்வாறு பிள்ளைகளின் வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனை வரும் நிலையில் கோபிக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வந்துவிடுகிறது. இதனால் ஈஸ்வரி, இனியா மற்றும் செழியன் மூவரும் ராதிகா வீட்டுக்கு சென்று கோபியை நலம் விசாரிக்கிறார்கள்.

சும்மாவே சாமி ஆடும் ஈஸ்வரிக்கு இப்போது சாம்பிராணி கிடைத்தால் சொல்லவா வேண்டும். எல்லாத்திற்கும் காரணம் நீ இந்த வீட்டுக்கு வந்த நேரம் தான் முதல்ல நம்ம வீட்டுக்கு வா என ராதிகா முன்னாள் கோபமாக பேசுகிறார். அப்போது கோபி ஒரு வழியாக ஏதோ பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்து விடுகிறார்.

மற்றொருபுறம் கோபியை வீட்டுக்கு அழைத்து வர போவதாக பாக்யா மற்றும் கோபியின் அப்பாவிடம் ஈஸ்வரி கூறுகிறார். ஆனால் எழில் இதற்கு கட்டாயம் நான் அனுமதிக்க மாட்டேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் பாக்யாவும் கோபி இங்கு வந்தால் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று தடாளடியாக பேசுகிறார். இவ்வாறு சுவாரஸ்யமான காட்சிகளுடன் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்