மருத்துவமனையில் கொடுத்த வாக்குமூலம்.. பாக்யாவை பார்த்து மிரண்டுபோன கோபி!

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ஆனது தற்போது புதுவிதமான கதை களத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் சமுதாயத்தில் பள்ளி மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சீண்டலில் மனமுடைந்து மாணவர்கள் தற்கொலை முயற்சியில் சமீப காலமாக தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே இதனை விழிப்புணர்வாக சொல்ல வேண்டும் என்ற விதத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் மகள் இனியாவின் தோழி நிகிதாவிற்கு பள்ளியின் கணினி ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிகிதா பெற்றோரிடம் சொல்ல தயங்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், நிகிதாவிற்கு என்ன நடந்தது என்பதை வெளியில் சொல்லத் தயங்கினார். ஏனென்றால் இதனை வெளியில் சொன்னால் நிகிதாவின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில் பெற்றோர் அவ்வாறு செய்துள்ளனர். ஆனால் மயக்கத்தில் இருந்து தெளிந்து நிகிதா போலீசாரிடம் கணினி ஆசிரியர் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் தற்கொலைக்கு முயற்சித்தேன் என்று வாக்குமூலம் கொடுத்து விட்டார்.

ஆனால் இதற்கு முன்பே பாக்யா மீடியாவில் கணினி ஆசிரியரைப் பற்றிய உண்மையை உடைத்த பள்ளியில் மாணவர்களுக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் அநீதியை வெளிச்சம் போட்டு காட்டினார். அவர் துணிச்சலுடன் பேசியபோது கோபி, அதனை கைதட்டி பாராட்டினார்.

ஏனென்றால் பள்ளியில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், ஆசிரியரை காப்பாற்றுவதற்காக நிகிதாவின் மீது தலைமைஆசிரியர் பழிபோடுவது முறையானது அல்ல என்றும் பாக்யா கொந்தளித்துக் பேசியது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.

அத்துடன் எப்போதுமே பாக்யாவில் திட்டி தீர்க்கும் கோபி தற்போது பாக்யா இவ்வளவு தைரியமாக பேசுவது அவரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் நிகிதாவின் அம்மாவும் பாக்யாவிடம் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்தனர். அத்துடன் இனியா மட்டுமல்லாமல் மற்ற மாணவிகளும் பாக்யாவை கட்டிப்பிடித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

Next Story

- Advertisement -