சுடிதாரில் கெத்து காட்டும் பாக்யா, ஷாக் ஆன கோபி.. அடுத்த டாஸ்க்கை இறக்கும் ராதிகா

எதார்த்தமாகவும் மற்றும் பெண்களுக்கு வரும் தடைகளை, வாய்ப்பாக மாற்றி தைரியமாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்லும் சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி. ராதிகா, பாக்யாவை காயப்படுத்த வேண்டும் என்று செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் அவருக்கே தெரியாமல் பாக்யா வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வழியாக அமைகிறது.

பாக்கியாவிற்கு கேண்டின் ஆர்டர் கிடைக்கக்கூடாது என்று பல வழிகளில் யோசித்த ராதிகா, இறுதியில் இவர் சூழ்ச்சியிலிருந்து அந்த ஆர்டரை சரியான முறையில் வாங்கிக் கொண்டார். பின்பு இவருடைய சாப்பாட்டை குறை கூறி கஷ்டப்படுத்த வேண்டும் என்று எடுத்த முயற்சியிலும் இவர் தோற்று தான் போனார். அடுத்ததாக பாக்யாவிற்கு வேறு விதத்தில் செக் வைக்க வேண்டும் என்று இனிமேல் நீங்க அனைவரும் சமைக்கும் போது சுடிதார் தான் போட்டு வர வேண்டும் என்று கண்டிஷனாக கூறிவிட்டார்.

Also read: அம்பலமாக போகும் குணசேகரின் சூழ்ச்சி.. ரகசிய வீடியோவை பார்க்கும் அப்பத்தா!

இதற்கு அடுத்து இந்த விஷயம் தெரிந்த பாக்கியாவின் மாமியார்,  இதற்காக எல்லாம் ராதிகாவிடம் தோற்றுப் போகக் கூடாது நீ சுடிதார் போட்டு தான் வேலைக்கு போகணும். என்று அவரை கூறும்படி பாக்கியா மற்றும் வீட்டு மருமகள் பிளான் பண்ணி காரியத்தை சாதித்து விட்டார்கள். பின்பு ராதிகா ஆபீஸ்க்கு சென்று கேண்டினுக்கு போய் பார்த்தால் அங்கே யாரும் காணும். அடுத்ததாக ஒவ்வொருவரும் சுடிதார் போட்டு வந்தார்கள்.

பின்னர் செல்வி அக்காவை பார்த்த ராதிகா எங்கே உங்க பாக்கியா மேடம். இல்ல சுடிதார் போட்டு வரணும் என்று சொன்னதும் எஸ்கேப் ஆயிட்டாங்களா என்று கேட்கிறார். உடனே நம்ம பாக்கியா சுடிதார் போட்டுக்கொண்டு ஒரு என்ட்ரி கொடுத்தாங்க பாரு அப்படியே ராதிகா ஷாக் ஆயிட்டாங்க. அந்த நேரத்தில் செல்வி அக்கா, ராதிகாவிடம் சொல்லும் அந்த ஒரு விஷயம் ரொம்பவே சூப்பராக இருந்தது. அதாவது இதை எதிர்பார்க்கலையா தகதகன்னு எரியுதா என்று சொல்கிறார்.

Also read: குணசேகரன் மாட்டிக் கொண்டு முழிக்கும் தருணம்.. ஜான்சிராணி இடம் சிக்குவாரா?

உடனே நம்ம பாக்கியா, ராதிகாவிடம் சுடிதார் போட சொன்னா அப்படியே நான் கேன்டீன் விட்டு போயிருவேன் என்று நினைத்துவிட்டீர்களா மேடம். அடுத்து இதை விட என்ன கஷ்டமான டாஸ்க் கொடுக்கலாம் என்று போய் யோசிங்க மேடம் என்று நக்கலாக பாக்கியா பேசியதை பார்க்கவே மனசுக்கு குளு குளு என்று இருந்துச்சு. ஒருவேளை ராதிகா ஜீன்ஸ் போட சொல்லி இருந்தா கூட இவங்க போட்டு இருப்பாங்க.

ஆனாலும் பாக்கியாவை இந்த சுடிதார் கெட்டப்பில் கோபி பார்த்தால் அவருடைய ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும். வழக்கம் போல தான் புலம்பிக்கிட்டு இருப்பார். அத்துடன் அவர் என்ன சொல்ல போறாரு சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்று கோபி பாட, அதற்கு ராதிகா என்ன கோபி, பாக்கியவை பார்த்து ரசிக்கிறீர்களா என்று கத்த போறாங்க. அத்துடன் இந்த காட்சி எல்லாம் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறது.

Also read: கன்னத்தை பழுக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி.. தம்பி செஞ்ச வேலைக்கு இது பத்தாது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்