கோபியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய பாக்கியா.. ராதிகா கேட்டதும் சரிதானே

விஜய் டிவியில் வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது கோபிக்கு மிகப்பெரிய பொறாமை என்றால் நாம் பாக்யாவை விட்டு பிரிந்து வந்ததுக்கு பிறகும் கொஞ்சம் கூட கவலை இல்லாமல் இவ்ளோ சந்தோசமாக அதுவும் சுதந்திரமாக அவள் இஷ்டப்படி இருக்கிறார் என்று பார்க்கும்போது தான் அவர் வயிற்றெரிச்சலில் பொங்கி எழுகிறார்.

ராதிகாவுக்காக கீழே போய் நியாயம் கேட்க போன கோபி எந்த விஷயத்தை கேட்கணுமோ அதை மறந்து விட்டு பாக்கியாவை இஷ்டத்துக்கு நீ உன்னுடைய ட்ரெஸ்ஸிங் ஸ்டைல மாத்திக்கிறே, இங்கிலீஷ் படிக்க போறேன்னு டியூஷனுக்கு போற, பியூட்டி பார்லர் போற போதாதுக்கு உன் பிரண்டு என்று சொல்லிட்டு அந்த வளர்ந்தவன் கூட எப்ப பாத்தாலும் கக்கப்புக்கு கக்கப்புன்னு சிரிச்சுக்கிட்டு இருக்கு இதெல்லாம் பாக்கவே கன்றாவியா இருக்கு என்று சொல்கிறார்.

Also read: எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஐஸ்வர்யா.. பேராசையால் இழந்து தவிக்கும் கண்ணன்

இதை கேட்டது அவங்க பசங்க சும்மாவா இருப்பாங்க, வந்தாங்க பாருங்க ரெண்டு சிங்ககுட்டி மாதிரி அப்பாவை நல்லா வச்சு செஞ்சுட்டாங்க. அடுத்ததாக பாக்கியா என்ன பேசணுமோ அதை தெளிவாக கோபியிடம் பேசி அவர் மண்டைக்கு எட்டுற மாதிரி சொல்லிட்டாங்க. ஆக மொத்தத்துல அசிங்கப்பட்டு போனது கோபியும் ராதிகாவும் தான். இதற்கு பேசாமல் மேலேயே இருந்திருக்கலாம். தேடி வந்து அசிங்கப்பட்டு விட்டார்கள்.

அடுத்ததாக இன்றைய எபிசோடு படி மாடிக்கு போன கோபியிடம் ராதிகா உங்கள கீழ போயி உங்க அம்மாவிடம் ஏன் அடிக்கடி என்கிட்ட வம்புக்கு வாராங்க என்று தானே கேட்க சொன்னேன் அதை விட்டு சம்பந்தமே இல்லாம எதுக்கு பாக்கியாவ பத்தி பேசினீங்க என்று கேட்கிறார். உடனே கோபி மறுபடியும் பாக்கியா ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்க எனக்கு பாக்கவே கோவமா வருது என்று சொல்ல அதற்கு ராதிகா உங்களுக்கு ஏன் கோபம் வரணும் என்று கேட்கிறார்.

Also read: கொக்கி குமாரிடம் மாட்டிக் கொண்ட இனியா.. ஆக்ஷன் கிங் ஆக மாறிய விக்ரம்

அது எப்படி ராதிகா கோவப்படாம இருக்க முடியும் அவ என்ன பண்ணாலும் சும்மா விட முடியுமா என்று சொல்ல உடனே ராதிகா கோபப்படனும் என்றால் நீங்க என்ன பாக்கியாவை லவ் பண்றீங்களா என்ன உங்க மனதில் இன்னும் பாக்கியா தான் இருக்கிறாரா அப்படி என்றால் தான் கோபம் வரும் என்று சொல்கிறார். உடனே கோபி அதெல்லாம் ஒன்னும் கிடையாது. அவளைக் கண்டாலே எனக்கு பிடிக்காது என்று சமாளிக்கிறார்.

இதனை அடுத்து ஜெனி, செழியினை ரொம்பவே பாராட்டி நீ பாக்கியா அத்தைக்காக இந்த அளவுக்கு சப்போர்ட்டாக பேசுவதை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்கிறார். ஆனாலும் இவர் மேல ஒரு டவுட்டாவே இருக்கிறது இவரை ஒரு பொண்ணு ரூட் போட்டுகிட்டு இருக்கு. அதை ஆரம்பத்திலேயே இவர் கட் பண்ணிக்கிட்டா சரி இல்லனா கோபி மாதிரி தான் செழியனும் செய்யப் போகிறார் என்பது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பார்க்கலாம் எந்த மாதிரி அமையப் போகிறது என்று.

Also read: பக்காவாக காய் நகர்த்தும் ஜனனி.. மாட்டிக்கொண்டு முழிக்க போகும் குணசேகரன்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை