ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு என்று புலம்பும் கோபி.. மாமியாரின் டார்ச்சர்

கொஞ்சம் சீரியஸா போய்கிட்டு இருந்தா பாக்கியலட்சுமி சீரியல் தற்போது கோபி செய்யும் காமெடியால் பார்க்கவே ரசிக்கும்படியாக இருக்கிறது. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்ற சொல்வதற்கு ஏற்ற மாதிரி கோபி நிலைமை தற்போது படும் மோசமாக இருக்கிறது. கிளி மாதிரி பொண்டாட்டியிருக்க குரங்கு மாதிரி ஆள தேடிட்டு போனா, இந்த மாதிரி தான் படாத பாடு படனும் அதற்கு உதாரணம் கோபியை சொல்லலாம்.

கோபி, ராதிகாவிடம் இனிமேல் நான் குடிக்கவே மாட்டேன் என்று சொன்ன பிறகும் ஏன் மூஞ்சிய இப்படி வச்சிருக்க என்று கேட்க. உடனே ராதிகா நீங்க குடிப்பதற்கு என்னமோ நான் தான் காரணம் என்று உங்க மொத்த குடும்பமும் சொல்றாங்க. இதுல வேற உங்க அம்மா என்ன விட்டுட்டு திரும்ப வீட்டுக்கே வந்திருன்னு உங்களை கூப்பிடுறாங்க அதை கேட்டு நீங்களும் அமைதியாக இருக்கீங்க என்று கோபியிடம் வாக்குவாதம் செய்கிறார்.

Also read: ஜான்சி ராணியும் கரிகாலனையும் கொத்தா தூக்கிய போலீஸ்.. தில்லு முல்லு செய்யும் குணசேகரன் கதிர்

பின்பு காலிங் பெல் அடிக்க அதற்கு ராதிகா உங்க அம்மா வீட்டுக்கே நேரடியாக உங்களை கூட்டிட்டு போக வந்துட்டாங்க. இருக்கட்டும் நான் என்ன பண்றேன்னு கோவத்தோட கதவை திறக்குறாங்க. ஆனா பார்த்தா அது கோபியோட அம்மா இல்ல ராதிகா அம்மா. இதை பார்த்து ஷாக் ஆன கோபி. உடனே ராதிகா அவங்க அம்மாவ கட்டி பிடித்து நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி அழ ஆரம்பிக்கிறார். இதை கேட்ட கோபியின் மாமியார் அவங்க வீட்டுக்கு கூப்பிட்டா நீங்க போங்க கோபி.

ஆனா என் மகளையும் சேர்த்து கூட்டிட்டு போங்க. சட்டப்படி அவ தான் உங்களோட மனைவி அதனால நீங்க இருக்க இடம் தான் அவளும் இருக்கணும் என்று கோபியை டார்ச்சர் செய்யும் அளவிற்கு கண்டிஷன் போட்டு விட்டார். இதை கேட்ட கோபி ஆள விடுங்கடா சாமி நான் எங்கேயும் போகல இங்க தான் இருக்க போறேன் என்று சொல்லி வெளியே கிளம்பி விட்டார். பிறகு கோபி வழக்கம்போல் போக வேண்டிய இடத்துக்கு போயிட்டாரு.

Also read: 1200 எபிசோடுகளை கடந்த சூப்பர் ஹிட் சீரியல்களை ஊத்தி மூடிய விஜய் டிவி.. ஏப்ரலில் அடுத்தடுத்து நிறைவடையும் 4 சீரியல்கள்

பின்ன குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு அப்படிங்கிற மாதிரி குடிக்கவே மாட்டேன் என்று ராதிகாவிடம் சத்தியம் செய்து காலில் விழுந்து கெஞ்சிய கோபி. மறுபடியும் குடித்துவிட்டு ரோட்டில் ரகளை செய்கிறார். அந்த நேரத்தில் ஆபீஸ் விஷயமாக செழியன் வந்த பொழுது கோபி அங்கே குடித்துக் கொண்டு போதையில் நிதானம் இல்லாமல் காரை தேடிக் கொண்டிருக்கிறார். பிறகு இதைப் பார்த்த செழியன் அவரை காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்கிறார்.

ஆனால் போதையில் இருந்ததால் அவரால் கார் ஓட்ட முடியவில்லை. உடனே செழியனே காரை ஓட்டிக்கொண்டு வருகிறார். அப்பொழுது கோபி, நீங்க எல்லாரும் நல்லவங்க நான் தான் பேட் பாய் நான் தப்பு பண்ணிட்டேன். நான் இந்த ராதிகாவை கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது. நான் செஞ்ச பெரிய தப்பு அதுதான் என்று செழியன் இடம் புலம்பிக்கொண்டே வருகிறார். எல்லாமே பட்டதுக்கு அப்புறம் தான் திருந்துவாங்க இவர் மட்டும் என்ன விதி விளக்கா. பிறகு அதே நேரத்தில் கோபி இன்னும் வீட்டுக்கு வராததால் பதற்றத்துடன் ராதிகா காத்துக் கொண்டிருக்கிறார். இன்னைக்கு என்ன சம்பவம் கோபிக்கு காத்துக் கொண்டிருக்கிறது தெரியவில்லை.

Also read: 6 வருடங்கள் கழித்து காதலனை கரம் பிடித்த ரோஜா சீரியல் பிரியங்கா.. ட்ரெண்டாகும் போட்டோஸ்

Next Story

- Advertisement -