பாக்யாவை அண்டிப் பிழைக்கும் கோபி அங்கிள்.. ஆமை போல் வீட்டுக்குள் புகுந்த சக்காளத்தி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தும் வகையில் மட்டமான கதையை வைத்து மிகக் கேவலமாக உருட்டிக் கொண்டு வருகிறார்கள். இதுவரை வந்த எத்தனையோ சீரியல்களில் இந்த மாதிரி ஒரு மொக்கையான சீரியலை யாருமே பார்த்ததில்லை. அந்த அளவிற்கு இந்த நாடகம் முழுக்க முழுக்க இரண்டு பொண்டாட்டி, இரண்டு மனைவி கதையை மட்டுமே வைத்து வருகிறது.

அப்படிப்பட்ட இந்த நாடகத்தில் தற்போது செழியன் செய்த தப்புகள் அனைத்தும் பாக்யாவிற்கு தெரிய போகிறது. அதாவது கோவிலில் மாலினி மற்றும் செழியன் பேசிக்கொண்டு இருப்பதை பாக்யா பார்த்து விடுகிறார். அப்பொழுது செழியன் இடம் எல்லா உண்மையும் கேட்கிறார். ஆரம்பத்தில் சொல்லத் தயங்கின செழியன் பாக்கியா அதட்டி கேட்டதால் அனைத்து உண்மைகளையும் போட்டு உடைக்கிறார்.

இனி இதை தெரிந்த பிறகு பாக்கியா ஜெனி வாழ்க்கையையும் மகன் வாழ்க்கையையும் காப்பாற்றுவதற்கு என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்துதான் கதை நகரப் போகிறது. இதற்கு அடுத்தபடியாக அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேசனும் அவ்வப்போது வந்து மிரட்டிக் கொண்டு வருவதால் அவருடைய வீட்டிற்க்கே நேரடியாக பாக்கியா செல்கிறார்.

பிறகு கணேசனிடம் அமிர்தாவை பற்றி கொஞ்சம் யோசித்துப் பாரு அவளோட சந்தோசம் உனக்கு முக்கியம் என்றால் அவளை விட்டு விலகிவிடு என்று சொல்கிறார். ஆனால் கணேசனும் பைத்தியக்காரன் போல் அவள் என்னுடைய மனைவி எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று சொல்கிறார். உடனே பாக்யா அப்படி என்றால் எனக்கு ஒரு மாதம் டைம் கொடு நான் வீட்டில் பேசிவிட்டு சொல்கிறேன் என்று கூறுகிறார்.

இதற்கிடையில் கோபி கையில் கொஞ்சம் கூட காசு இல்லாததால் அம்மா கூப்பிட்டதும் இதுதான் சான்ஸ் என்று பாக்யா வீட்டிற்கு வந்து தஞ்சம் அடைந்து விடுகிறார். இவர் பின்னாடியே ஆமை மாதிரி ராதிகாவும் வந்து விடுகிறார். வந்தது மட்டும் இல்லாமல் ஓவர் அலப்பறை பண்ணிக்கொண்டு மறுபடியும் இவருடைய திமிரை பாக்கியாவிடம் காட்டுகிறார். ஆக மொத்தத்தில் பாக்யாவிற்கு என்ன பிரச்சனைகள் வந்தாலும் இரும்பு மனிதர் மாதிரி தாங்கிக் கொள்ளும் கேரக்டராகவே வாழ்ந்து வருகிறார்.

ஒரு பக்கம் கோபி ராதிகா, இன்னொரு பக்கம் பிள்ளைகளின் வாழ்க்கை என்று பாக்யா போராடி வருகிறார். ஒருவேளை பாக்கியா மாலினி சைக்கோவையும், பைத்தியக்காரன் கணேசனையும் ஒன்று சேர்த்து வைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு தான் கதை லாஜிக்கே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்