பாக்யாவிடம் வசமாக சிக்கிய கோபி.. பாக்கியலட்சுமி சீரியலின் எதிர்பாராத திருப்பம்!

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலானது இல்லத்தரசிகளுக்கு இஷ்டமான சீரியலாக மாறிக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது கோபி பாக்கியாவை விட்டுப் பிரிந்து, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள துணிந்து விட்டார். இந்நிலையில் பாக்கியலட்சுமி புதிதாக கேட்டரிங் செய்வதற்கென்றே தனி வீடு வாடகைக்கு எடுத்து சமையல் தொழிலை விரிவுபடுத்த உள்ளார்.

எனவே அதை துவங்கி வைக்க சினிமா பிரபலங்களான ரஞ்சித் மற்றும் அவருடைய மனைவி ப்ரியா ராமன் இருவரையும் விருந்தினராக அழைத்துள்ளனர். அதே சமயத்தில் ராதிகாவும் தன்னுடைய ஆபீஸ் திறப்பு விழாவிற்கு ரஞ்சித்-பிரியா ராமன் இருவரையும் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர்.

இன்று நடைபெற உள்ள பாக்கியலட்சுமியின் சிறப்புத் தொகுப்பு மாலை 3 மணிக்கு துவங்கி 6 மணிக்கு முடிவடைய உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர் யாருடைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பதே சஸ்பென்ஸ்.

இந்த சூழல் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் விபத்தில் சிக்கிய ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவரைப் பார்ப்பதற்கு பாக்கியா சென்றுள்ளார். அதே நேரத்தில் கோபி பெங்களூர் செல்வதாக பாக்யாவிடம் பொய் சொல்லிவிட்டு ராதிகாவை பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ஆகையால் ஹாஸ்பிடல் வாசலில் கோபியின் காரை பார்த்த பாக்யா அதிர்ச்சியடைந்தார். அத்துடன் மருத்துவமனைக்கு உள்ளே சென்ற பாக்கியா, அங்கிருந்த கோபியை பார்த்ததும் ஆச்சரியப்பட்டார்.

அத்துடன் கடந்த சில நாட்களாகவே கோபியின் நடவடிக்கை சரியில்லாததால், ஏதோ ஒன்றை நம்மிடம் மறைக்கிறார் என்ற சந்தேகம் பாக்யாவிற்கு எழ தொடங்கிவிட்டது. மேலும் கோபி பாக்கியாவிடம் ராதிகாவை பற்றி சொல்லிவிடுவாரோ! என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்