புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இனியாவை பாக்கியாவிடம் இருந்து பிரித்த கோபி.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பிறகு குடும்பமே உறுதுணையாக இருப்பதால் பாக்யா, கோபி விட்டு சென்றதை நினைத்து துளி கூட கவலைப்படாமல் இருக்கிறார். ஆனால் அதற்கு மாறாக இனியா செய்திருக்கும் வேலை தற்போது பாக்யாவை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.

அதாவது இனியா பள்ளி நேரத்தில் தோழிகளுடன் விளையாட்டு மைதானத்தில் அரட்டை அடித்ததால் வகுப்பு ஆசிரியர் அவர்களுடைய பெற்றோருடன் நாளைக்கு பள்ளிக்கு வர வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி இருந்தார்.

Also Read: அப்பாவுக்கு மகள் தப்பாம பிறந்திருக்கு.. திருட்டுத்தனத்தில் கோபியை உரித்து வைத்திருக்கும் இனியா

இதை பாக்யாவிடம் சொல்ல தயங்கிய இனியா ஏதோ ஒரு தைரியத்தில் மறுநாள் பள்ளிக்கு சென்று விட்டார். அங்கு அவளுடைய தோழிகள் அனைவரும் பெற்றோரை அழைத்து வந்த நிலையில், இனியா மட்டும் பெற்றோரை அழைத்து வராததால் வகுப்பறையில் இருந்து வெளியே நிற்க வைக்கப்பட்டார்.

அதன் பிறகு இனியா தன்னுடைய தந்தை கோபியை தொடர்பு கொண்டு அவரை பள்ளிக்கு வர வைத்தார். இதுவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அப்பாவின் மீது கோபத்தில் இருந்த இனியா தன்னுடைய தவறை மறைப்பதற்காக அப்பாவை பகடைக்காயாய் பயன்படுத்தியது பாக்யாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

Also Read: எல்லாத்தையும் பணமாகவே பார்க்கும் செந்தில் ராஜலட்சுமி.. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்து பாக்யாவின் மாமியார் இனியாவை அடித்து விடுகிறார். உடனே எதிர் வீட்டில் இருந்த கோபி இனியாவிற்கு சப்போர்ட்டாக வந்து பேசியதால் குடும்பத்தினரையே எதிரி போல் இனியாவை பார்க்க வைக்கிறார்.

இதன் பிறகு இனியாவை தன்னுடன் அழைத்து செல்ல கோபி பார்க்கிறார். இதற்கு இனியாவும் சம்மதித்து அவருடன் செல்லப் போகிறார். அங்கு ராதிகா சித்தியாக நடந்து கொண்டு அவரை இனிவரும் நாட்களில் கொடுமைப்படுத்தப் போகிறார்.

Also Read: அசல் கோலாறால் சர்ச்சையில் சிக்கிய வடிவேலு.. கடும் கோபத்தில் ஷங்கர்

அப்போதுதான் பாக்யாவின் அருமை இனியாவிற்கு தெரிய போகிறது. மேலும் குடும்பத்தினரை கோபியிடமிருந்து பிரித்ததற்காக, தற்போது இனியாவை பாக்கியாவிடம் இருந்து பிரித்து ஒரே கல்லில் ரெண்டு மாங்காவை அடித்திருக்கிறார் சதிகார கோபி.

- Advertisement -

Trending News