செல்வியை வைத்து பாக்யாவை அசிங்கப்படுத்திய கோபி.. குடும்பமே சேர்ந்து ஒத்து ஊதிய கேவலம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும் விஷயத்தை தெரிந்ததும், அதை தாங்கிக் கொள்ளாத பாக்யா 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கணவர் கோபியை விவாகரத்து செய்துவிட்டார்.

விவாகரத்து ஆன கையோடு வீட்டிற்கு வரும் பாக்யாவை வீட்டிற்குள் வரவிடாமல் கோபி தடுக்கிறார். உடனே எழில், அம்மா பாக்யா வீட்டில் ஒன்றும் தங்க வரவில்லை. அவர்களது உடமைகளை எடுத்துக் கொள்ள வந்திருக்கிறார் என்று கோபிக்கு பதிலடி கொடுக்கிறார்.

பாக்யாவிற்கு சொந்தமான பொருள் இங்கு எதுவும் இல்லை. இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் என்னுடைய சம்பாதித்தனையில் வந்தது என்று பாக்யாவை கோபி அசிங்கப் படுத்துகிறார். ஆனால் வீட்டில் இருக்கும் இனியா, மகன், மருமகள் அனைவரும் பாக்யாவை வீட்டைவிட்டு போக வேண்டாம் என்று சொல்கின்றனர்.

பாக்யா இந்த வீட்டில் ஒரு சமையல்காரி மட்டும்தான். வீட்டில் வேலை செய்யும் செல்விக்கும் பாக்யாவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 5000 ரூபாய் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் இந்த வீட்டிற்கு சமைத்துக் கொடுத்து, வீட்டில் இருப்பவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்று வேலைக்காரி அளவுக்கு பாக்யாவை வைத்து பேசி அவமானப்படுத்துகிறார்.

அந்த சமயத்திலும் பாக்யா தன்னுடைய கோபத்தை அடக்கிக்கொண்டு வீட்டில் இருக்கும் தன்னுடைய துணிமணிகளை பெட்டியில் கட்டிக்கொண்டு கிளம்புகிறார். மகள் இனியா பாக்யாவை வீட்டை விட்டு போக வேண்டாம் என கெஞ்சுகிறார்.

விவாகரத்து ஆன பின் குடும்பத்தின் முன்னிலையில் கோபி பாக்யாவை இவ்வளவு அசிங்கப்படுத்தியதால், அவர் வாய் திறந்து கோபியை விளாசியிருந்தால் இன்னும் எபிசோட் சூடு பிடித்திருக்கும் என்பது சின்னத்திரை ரசிகர்களின் கருத்து.

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -