கோபியை குழப்பிவிடும் அம்மா.. பதறிப் போய் பாக்யாவிடம் வாய் கொடுத்து மூக்குடைந்த ராதிகா

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலில் ஓரளவுக்கு நல்லா போயிட்டு இருக்க சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இதற்கு காரணம் இரண்டே விஷயங்கள் தான் ஒன்று கோபியின் நடிப்பு மற்றொன்று பெண்களைக் கவரும் வகையில் பாக்கியாவின் போராட்டமான வாழ்க்கை. என்னதான் கோபி நடிப்பு நெகட்டிவ் ஆக இருந்தாலும் அவருடைய நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது அந்த அளவுக்கு எதார்த்தமாக நடித்து வருகிறார்.

இனியா எடுத்த முடிவு கோபியை அதிக அளவில் பாதித்ததால் மதுக்கு அடிமையாகி ராதிகாவிடம் வசமாக சிக்கிக் கொண்டார் என்றே சொல்லலாம். ஏனென்றால் இவரை விட்டு ராதிகா போக நினைக்கும் போது அவரை தடுக்கும் முயற்சியில் ரொம்பவும் கீழே இறங்கி கால்ல விழுந்து கெஞ்சி கூத்தாடி சமாதானம் படுத்திருக்கிறார். இதை பார்த்த கோபியின் குடும்பம் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

Also read: இனியாவை தும்சம் செய்யும் புத்தம் புது சீரியல்.. பாக்கியலட்சுமியை தொடர்ந்து விஜய் டிவி ரீமேக் செய்யும் சூப்பர் ஹிட் பெங்காலி தொடர்

அதன்பின் கோபி எப்படியோ ராதிகாவை சமாளித்து வீட்டிற்கு திரும்ப அழைத்து விட்டார். பிறகு கோவிலில் கோபியை பார்த்து அவருடைய அம்மா நீ எங்க கூட இருந்தவரை நல்லா தானே இருந்த இப்ப என்ன ஆச்சு உனக்கு. பேசாம ராதிகாவ விட்டுவிட்டு நம்ம வீட்டுக்கு திரும்ப வந்துரு என்று சென்டிமென்ட் ஆக பேசி கோபியை குழப்புகிறார். இதை ஒளிந்து இருந்து கேட்ட ராதிகா மிகவும் அதிர்ச்சி அடைகிறார்.

இதைக் கேட்ட கோபி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. கடைசியில் இரண்டு பேருமே இல்லாமல் நடு ரோட்டில் அனாதையாக தான் இருக்கப் போகிறார் என்று தெரிகிறது. பின்பு கோவிலில் அவர் அம்மா பேசியதே கேட்ட ராதிகா பதறிப் போய் பாக்யாவை வம்பு இழுக்கிறார்.

Also read: எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

ஆனால் ராதிகா கடைசியில் வாயைக் கொடுத்து மூக்குடைந்து தான் மிச்சம். பாக்கியா ரொம்பவும் தைரியமாக நான் வேண்டாம் என்று தூக்கிப் போட்ட வாழ்க்கை தான் நீங்க வாழுறீங்க. என்று அணல் பறக்கும் பதிலடியாக ராதிகாவை பார்த்து சொல்கிறார். இதைவிட கேவலமாக ராதிகாவை யாரும் அசிங்கப்படுத்த முடியாது.

அதாவது நீ வாழ்கிற வாழ்க்கை நான் போட்ட பிச்சை என்று சொல்லாமல் சொல்றாங்க. வேற லெவல்ல இருந்துச்சு பாக்கியாவோட பேச்சு. இதுக்கு அப்புறமும் ராதிகா, பாக்கியா கிட்ட வம்பு வச்சிக்கிட்டு இருந்தா அசிங்கம் ராதிகாவுக்கு தான் அதை புரிந்து நடத்துகிட்டா நல்லா இருக்கும். பார்க்கலாம் கோபி என்னதான் முடிவு எடுக்க போறாரு என்று.

Also read: கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மீனாவின் அப்பா.. துணிந்து சவால் விட்ட தனம்

Next Story

- Advertisement -