திருமணம் செய்ய உள்ள கோபி.. மகிழ்ச்சியில் இருக்கும் ரசிகர்கள்

யூட்யூபில் கலக்கி வரும் பரிதாபங்கள் கோபி, சுதாகர் நண்பர்களில், சுதாகருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில், கோபிக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஆடிஷனுக்கு சென்ற கோபி மற்றும் சுதாகர் அங்கு தேர்வாகாததால், தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து இன்று ரசிகர்களின் பேராதரவு பெற்று வருகின்றனர். இவர்களின் வீடியோக்கள் அரசியலில் இருந்து திரைப்படங்கள் வரை அனைத்து விஷயங்களையும் நகைச்சுவையோடு இருக்கும்.

பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனல் மூலமாக உலகில் உள்ள அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த கோபி மற்றும் சுதாகர் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளனர். இதனிடையே சமீபத்தில் பரிதாபங்கள் சுதாகருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது கோபிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

சுதாகரனின் திருமணத்திற்கு சென்ற கோபி தனியாக நின்றிருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, கோபியின் நிலை வருத்தமாகவும், கவலையாகவும் உள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால் கல்லூரி காலத்திலிருந்து ஒன்றாக இருந்து வந்த தனது நண்பரின் திருமணத்தை கண்டு கோபி மகிழ்ச்சியில் உள்ளதாக கூறினார்.

ஆனால் தற்போது கோபியும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டு சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது கோபியின் நிச்சயதார்த்தத்தில் எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

மேலும் கோபியின் திருமணத்திற்கு பின்னும் கோபி மற்றும் சுதாகர் தங்களது பாரிதாபங்கள் யூடியூப் சேனலில் விடீயோக்களை தொடர்ந்து பதிவிடுவதாகவும், திரைப்படங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது