ரெண்டு பொண்டாட்டி வாழ்க்கையில் படாத பாடுபடும் கோபி.. இப்போ ராதிகா நிலைமை என்ன

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா, கோபி இடம் சண்டை போட்டு கோபத்தில் அம்மா வீட்டிற்கு போகிறார். அங்கே அவருடைய அம்மா சமாதானப்படுத்தி வீட்டிற்கு போக சொல்ல, அதற்கு ராதிகா இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நிம்மதியாக இங்கே தங்கி விட்டு நாளைக்கு போகிறேன் என்று சொல்லி அவருடைய அம்மா வீட்டில் இருந்து விடுகிறார்.

அடுத்ததாக ராதிகா இன்னும் வரவே இல்லை இனிமேல் வரவும் மாட்டார் என்று ரொம்பவே சந்தோஷத்தில் செல்வி அக்கா சொல்லிக் கொண்டிருக்கிறார். அத்துடன் இனி கோபியையும் வெளியிலே விட மாட்டாங்க அப்படின்னா பாக்கியா அக்கா கூட சேர்த்து வைப்பது தான் ஈஸ்வரி அம்மா பிளான் பண்ணுவாங்க என்று சொல்கிறார்.

Also read: என்ன நடிப்பு? நீலி கண்ணீர் வடிக்கும் குணசேகரன்.. கரிகாலனை பதம் பார்த்த சக்தி

அதற்கு பாக்கியா, கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா நானே இன்னும் ராதிகா வரலன்னு சொல்லிட்டு கவலையாக இருக்கிறேன். நீ வேற எதையாவது பேசிக் டென்ஷன் படுத்தாத கொஞ்ச நேரம் அமைதியாக இரு என்று சொல்கிறார். அடுத்து வழக்கம்போல் கோபி அவருடைய வேலையை கரெக்டா செய்ய ஆரம்பித்து விடுகிறார்.

அதுதான் கவலையை மறப்பதற்கு குடிக்க போய்விடுகிறார். அங்கே இவருடைய நண்பரிடம் என்னுடைய வாழ்க்கை இப்படி சந்தோஷம் இல்லாமல் ஆகிவிட்டதே என்று புலம்பி தவிக்கிறார். அவரும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அளவுக்கு மீறி குடித்து மட்டையாகி விடுகிறார் கோபி. ஒரு கட்டத்தில் கோபி என்ன சொன்னாலும் கேட்க மாட்டான் என்று அவருடைய நண்பர் கிளம்பி விடுகிறார்.

Also read: ஒட்டு மொத்த குடும்பத்தையும் லாக் செய்யும் குணசேகரன்.. அருண் கதை இதோடு முடிஞ்சது போல

பிறகு கோபி ஃபுல்லா குடித்துவிட்டு காரை எடுக்க முடியாமல் விழுந்து விடுகிறார். இதற்கிடையில் பாக்கியா வீட்டில் கோபியின் அம்மாவுக்கு மருந்து தேய்த்து விடுகிறார் எழில். அந்த நேரத்தில் கோபி உதவிக்கு யாரையாவது கூப்பிடலாம் என்று எழிலுக்கு போன் பண்ணுகிறார். ஆனால் எழில் இவர் ஏன் நம்மளுக்கு கால் பண்றார் என்று போனை அட்டென்ட் பண்ணாமல் விடுகிறார்.

அடுத்து கோபியின் அம்மா எடுத்துப் பேசி என்னன்னு கேளுடா என்று சொல்ல அதன் பின் எழில் போன் அட்டென்ட் பண்ணுகிறார். அப்பொழுது கோபி நான் வீட்டிற்கு வர முடியாமல் இருக்கிறேன் என்னை வந்து கூட்டிட்டு போ என்று சொல்கிறார். அதற்கு நான் ஏன் வரணும் உங்களால் வர முடியவில்லை என்றால் அங்கே இருங்க என்று சொல்லிட்டு போனை கட் பண்ணி விடுகிறார். அடுத்து எல்லாரும் போக கோபியின் அம்மா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பாக்கியா, கண்டிப்பாக கோபியை இப்படியே விட மாட்டார் போய் கூட்டிட்டு வருவார்.

Also read: ராதிகாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோபி.. சந்தோஷமாக வேடிக்கை பார்க்கும் ஒட்டு மொத்த குடும்பம்

- Advertisement -spot_img

Trending News