சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

வழக்கம்போல் புலம்பித் தவிக்கும் கோபி.. பாக்யாவை படாத பாடு படுத்தும் ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலுக்கு குடும்பப் பெண்களின் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரமும் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறார்கள். முக்கியமாக கோபி, பாக்கியா நடிப்பு மிகவும் யதார்த்தமாகவும் பார்ப்பதற்கு ரசிக்கும்படியாக அமைந்து வருகிறது. அந்த வகையில் இப்பொழுது இந்த சீரியல் இன்னும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

அதாவது பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்து ராதிகாவுடன் வாழ்ந்து வந்திருக்கும் கோபி இப்பொழுது கொஞ்ச நாட்களாகவே பாக்யா மீது அதிக அளவில் பொறாமைப்பட்டு வருகிறார். பாக்யாவிற்கு ஒரு நல்ல நண்பராகவும் ஒரு சப்போர்ட் ஆகவும் ரஞ்சித் அவர்கள் இருக்கிறார். ஆனால் இவர்கள் இருவரும் பழகும் விதத்தை தவறாக புரிந்து கொண்டு அதிக அளவில் டென்ஷன் ஆகி கோபத்தை காட்டுகிறார்.

Also read: ஜீவாவை வச்சு செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. கதிர் மற்றும் கண்ணனால் பிரியும் சோகம்

சூப்பர் மார்க்கெட்டில் பாக்கியா, ரஞ்சித்துடன் பழகுவதை பார்த்த கோபியின் நண்பர் எதார்த்தமாக அவரிடம் போன் பண்ணி சொல்கிறார். இதைக் கேட்ட கோபி கடுப்பாகி வீட்டில் இருந்து கிளம்பி அவர்களை பார்ப்பதற்காக சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்கிறார். பிறகு அங்கே அவர்களை காணும் என்றவுடன் அங்கே இருந்த செக்யூரிட்டி இடம் அவர்களின் போட்டோவை காட்டி இவர்கள் எங்கே என்று கேட்கிறார். அதற்கு அந்த செக்யூரிட்டி இப்பதான் இவர்கள் பைக்கில் போனார்கள் என்று கூறுகிறார். இதைக் கேட்ட கோபி அதிக அளவில் டென்ஷன் ஆகி ஓவர் ரியாக்சன் கொடுக்கிறார்.

ஆனால் இவர் ஏன் டென்ஷன் ஆகணும், ஏன் கோபப்பட வேண்டும். இவர் தான் பாக்யாவை வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டு போய்விட்டார். அப்புறம் எதுக்கு இவங்களை பத்தி இவ்வளோ யோசிச்சு அலப்பறையை கூட்டுகிறார். அவங்க எப்படி இருந்தா இவருக்கு என்ன வந்துச்சு. இந்த மனுஷன் கொஞ்சம் ஓவரா தான் போறாரோ என்று சொல்லும் அளவிற்கு பொறாமையில் பொங்கி வருகிறார். இது எல்லாத்துக்கும் காரணம் பாக்கியம் மேல இன்னும் இவருக்கு இருக்கும் பொசசிவ் தான். ஆனால் இவருக்கு அதற்கு உரிமையே இல்லை.

Also read: விட்டா ட்ரோனை வேட்டி குள்ள விற்றுவாங்க.. எதிர்நீச்சல் குணசேகரன் ஃபேமஸ் ஆன கெத்தான 5 டயலாக்

அடுத்தபடியாக பாக்கியாவை கேண்டீனில் போய் ராதிகா வம்பு இழுக்கிறார். இவர் சமைக்கும் சாப்பாட்டை ஏதாவது குறை சொல்லணும் என்ற நோக்கத்துடன் சில விஷயங்களை செய்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை. பின்பு அவரை வேற விதத்தில் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நோக்கில் நீங்க வேலை பார்க்கிறது ஒன்னும் கல்யாண வீட்டுக்கு இல்லை ஐடி கம்பெனிக்கு. அதனால் நீங்கள் சமைக்கும் போது அனைவரும் ஒரே மாதிரியான யூனிபார்ம் அதுவும் சுடிதார் டிரஸ் தான் போட்டுட்டு சமைக்கனும் என்று கண்டிசனாக சொல்லிவிட்டார்.

இதனால் பதட்டம் அடைந்த பாக்யா, வீட்டிற்கு வந்து மிகவும் சோகமாக இருக்கிறார். பின்பு இதைப்பற்றி மருமகளிடம் சொல்லும்போது அவர்கள் இதெல்லாம் ஒரு விஷயமா சுடிதார் தானே போடுங்க என்று கூறுகிறார். ஆனால் இதை எப்படி நம்ம மாமியாரிடம் கூறி சம்மதம் வாங்குவது என்று யோசித்து அதற்கும் ஒரு பிளான் போட்டு மாமியார் வாயாலயே நீ சுடிதார் போட்டுக்கோ என்று சொல்ல வைக்கிறார்கள். பின்பு சுடிதார் போட்டு கேண்டியனுக்கு வந்து ராதிகாவுக்கு ஷாக் கொடுக்கிறார்.

ராதிகாவும் இவரை பார்த்து வாய் அடைத்து போய் நிற்கிறார். இதை அவர் வீட்டிற்கு வந்து கோபி இடம் கூறுகிறார். அவர் இதை கேட்டு அதற்கு மேல் ஓவர் ரியாக்ஷன் கொடுக்கிறார். பின்பு இது எல்லாத்துக்கும் காரணம் நீதான் என்று ராதிகாவை கூறுகிறார். நான் என்ன பண்ணுனேன் கோபி என்று கேட்கிறார். அதற்கு கோபி நீதான் அவளை இதெல்லாம் செய்ய தூண்டின. பாக்கியாவிற்கு கேன்டீன் ஆர்டர், ஸ்போக்கன் இங்கிலீஷ், இப்பொழுது சுடிதார் வேற. தொடர்ந்து அவள் இப்பொழுது பெரிய ஆளா போயிட்டே இருக்கா இது எங்க போய் முடியப் போகுது என்று தெரியவில்லை என்று வழக்கம் போல் புலம்புகிறார்.

Also read: ஜான்சி ராணி, குணசேகரனின் மாஸ்டர் பிளான்.. சூழ்ச்சி வலையில் சிக்குவாரா அப்பத்தா?

- Advertisement -

Trending News