ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அடேங்கப்பா இது உலக மகா நடிப்புடா சாமி.. கலியுக ராமனாக மாறிய கோபியின் வீடியோ

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய நாளுக்கான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோபி பிக்னிக் செல்லும் தன் மகள் இனியாவை ராதிகா வீட்டில் விட மறுக்கிறார். எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் நல்லவன் போல் நடிக்கிறார்.

எனக்கு வேலை இருக்கு என்னால் இனியாவை ராதிகா வீட்டில் விட முடியாது என்று கூறுகிறார். அதற்கு கோபியின் அம்மா போகும் வழியில் இறக்கி விட்டு போ என்று கூறுகிறார். அதற்கு கோபி என்னால் பெண்களிடம் எல்லாம் பேச முடியாது என்று சொல்கிறார்.

கோபியின் தந்தையோ நீ யாரிடமும் பேச வேண்டாம் வீட்டுக்கு வெளியிலேயே விட்டு செல் என்று சொல்கிறார். உடனே கோபி அது எப்படி வயசு பெண்ணை வெளியில் விட முடியும் என்கிறார்.

அதைக்கேட்டு கோபியின் அம்மா அவர் கணவரிடம் பாத்தீங்களா கோபி ராதிகாவிடம் பேச கூச்சப்படுகிறான் என்றும், அவன் எந்த பெண்ணிடமும் பேச மாட்டான் என்றும் பெருமையாக சொல்கிறார்.

அதற்கு கோபி திருதிருவென முழிக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் நல்லா நடிக்கிற கோபி, கண்டிப்பா ஒரு நாள் பாக்யா கிட்ட சிக்க போற என்றும் கூறுகின்றனர். உலக மகா நடிப்புடா கோபி

bhagkiya-laxmi-goip
bhagkiya-laxmi-goip
- Advertisement -

Trending News