சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

பாக்கியாவின் கதையை முடித்துவிட்ட கோபி.. ஹோட்டலுக்கு சீல் வைத்ததால் புலம்பித் தவிக்கப் போகும் ஈஸ்வரி

Bhakkiyalakshmi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்கியாவை வேண்டாம் என்று ராதிகா பக்கம் போயிருந்தாலும் ஒவ்வொரு நிமிஷமும் பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என்று சந்தோசத்தை ஒட்டுமொத்தமாக தொலைத்து பாக்கியாவை நினைத்து புலம்புகிறார். ஆனால் இதெல்லாம் கண்டு கொள்ளாத பாக்கியம் தன்னை விட்டு ஒரு மிகப்பெரிய பிரச்சனை போய்விட்டது.

இனி நாம் நினைத்தபடி நமக்கான வாழ்க்கை வாழலாம் சொந்த காலில் நின்னு ஜெயிக்கலாம் என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு விஷயங்களிலும் வெற்றி பெற்று வந்தார். இதனால் பாக்யாவை தோற்க முடியாத கோபத்தில் கோபி தற்போது ஒட்டுமொத்தமாக பாக்யாவின் கதையை முடித்து விடும் அளவிற்கு வன்மத்தை கொட்டி விட்டார்.

அந்த வகையில் பாக்கியாவின் ஹோட்டலுக்கு ஆனந்த் என்பவரை அனுப்பி பாக்யா பக்ரீத்துக்கு செய்த சமையல் ஆர்டரில் கலப்படத்தை ஏற்படுத்தி மிகப் பெரிய பிரச்சினையை ஏற்ப்படுத்தி விட்டார். இது எதுவும் தெரியாத பாக்யா செய்த சாப்பாடு அனைத்தையும் அனுப்பி வைத்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் பாக்கியாவின் ஹோட்டலுக்கு முன் நின்று சத்தமிட்டு பாக்கியாவை திட்டி ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

அத்துடன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் டிவிலயும் இந்த விஷயம் வெளியானதால் போலீஸ் கேஸ் ஆகி பாக்கியா ஹோட்டலுக்கு சீல் வைக்கும் அளவிற்கு கோர்ட் உத்தரவு கொடுத்து விட்டது. இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாக்கிய தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியாகி நிற்கிறார். ஆனாலும் அம்மாவுக்கு ஒரு பிரச்சனை என்றதும் செழியன் மற்றும் எழில் வந்து பாக்யா பக்கத்தில் துணையாக நிற்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் ஈஸ்வரி, இதுவரை ஒழுங்கா போயிட்டு இருந்த ஹோட்டல் இன்னைக்கு நான் துவங்கி வைத்த ராசி தான் இப்படி பாக்கியா ஹோட்டலில் மூடும் அளவிற்கு கொண்டு போய் நிறுத்திவிட்டது என்று அழுது புலம்பி தவிக்கப் போகிறார். ஆனால் பாக்யாவுக்கு உதவும் வகையில் பழனிச்சாமியும் வந்து விட்டார்.

இதனை தொடர்ந்து இந்த பிரச்சனையில் எங்கு தப்பு நடந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் விதமாக பாக்கியா நிதானமாக நின்னு யோசிக்க போகிறார். அப்பொழுது தான் ஆனந்த் யார் எப்படிப்பட்டவர் என்ற விஷயம் பாக்யாவிற்கு தெரிய வரப்போகிறது. பிறகு ஒவ்வொரு விஷயத்தையும் கண்டுபிடிக்கும் விதமாக பாக்யா செயல்பட்டு இதற்குப் பின்னணியில் இருப்பது கோபி தான் என்பதையும் கண்டுபிடித்து விடுவார்.

பிறகு கோட்டு, கேஸ் என்று வாதாடி தனக்கான நியாயத்தை கேட்டு பாக்கிய திரும்பவும் ஹோட்டலை எடுத்து நடத்தி விடுவார். ஆனால் இந்த சூழ்ச்சிக்கெல்லாம் காரணம் கோபி தான், பாக்கியாவை பழி வாங்குவதற்காக மக்களின் உயிரில் விளையாடிய கோபிக்கு நிச்சயம் தண்டனை கிடைப்பது உறுதியாகிவிட்டது. ஆனால் இதோடு இந்த கதையை முடித்து விட்டால் பாக்கியா சீரியல் எடுத்து வைத்த கொஞ்ச நெஞ்ச பேரும் மிச்சமாக இருக்கும்.

- Advertisement -spot_img

Trending News