திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

நாலா பக்கமும் பாக்கியாவுக்கு குடைச்சல் கொடுக்கும் கோபி.. செழியனுக்கு போன வேலை, டார்ச்சர் செய்யும் ஜெனி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்யா வீட்டில் தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்சனைகள், சண்டைகள் வந்து கொண்டே இருப்பதால் ஜெனி அங்கே சந்தோஷமாக இருக்க வாய்ப்பில்லை என நினைத்து ஜெனியின் அம்மா பாக்யா வீட்டிற்கு மகளை கூட்டிட்டு போக வந்திருக்கிறார். அப்பொழுது பாக்யா மற்றும் ஈஸ்வரிடம், ஜெனிக்கு ஒரு கைக்குழந்தை இருக்கிறது வயிற்றிலும் ஒரு குழந்தை இருக்கிறது.

அதனால் இப்போது ஜெனிக்கு முழுக்க முழுக்க நிம்மதியான சந்தோஷம் மட்டும்தான் தேவைப்படுகிறது. ஆனால் இங்கே தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதால் ஜெனி சந்தோஷமாக இருந்து பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அதனால தப்பா நினைக்காமல் ஜெனியை என்னோட கொஞ்ச நாளைக்கு அனுப்பி வைத்து விடுங்கள் என்று கேட்கிறார். உடனே ஈஸ்வரி மற்றும் பாக்யா, ஜெனியை கூட்டிட்டு போங்க என சொல்கிறார்கள்.

கையில் பணத்தை வைத்திருந்தும் பாக்யாவுக்கு உதவாமல் இருக்கும் செழியன்

பிறகு ஜெனி ரூமுக்கு போய் அனைத்து டிரஸ் எடுத்துட்டு வந்து அவங்க அம்மா ஜெனியை வலுக்கட்டாயமாக கூப்பிடுகிறார். ஆனால் ஜெனி எப்போதுமே உறவுக்கும் புகுந்த வீட்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் என்னால் வர முடியாது. இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு முழிக்கும் இந்த தருணத்தில் நான் இவர்களை விட்டுட்டு வர முடியாது.

அதுபோக நானும் வந்துவிட்டால் ஈஸ்வரி பாட்டி தனியாக இருப்பாங்க. நான் இப்போதைக்கு எங்கேயும் வரவில்லை என்று அம்மாவிடம் சொல்கிறார். பிறகு பாக்யாவை பார்த்து நான் உங்களுக்கு இங்கே இருப்பது பாரமாக இருக்கிறதா? நானும் இந்த குடும்பத்தை சேர்ந்தவர் தானே? எதுக்கு எடுத்தாலும் என்னை ஏன் தனியாக பிரித்துப் பார்த்து எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க? என சென்டிமெண்டாக பேசி பாக்யாவை பீல் பண்ண வைக்கிறார்.

பிறகு பாக்கியமும், ஜெனி இவ்வளவு தூரம் பேசிய பிறகு நாங்களும் எங்கேயும் அனுப்பி வைப்பதாக இல்லை. அதனால் நீங்கள் ஜெனியை பற்றி கவலைப்படாமல் கிளம்புங்க நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார். இதை எல்லாம் பார்த்து செழியனும் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கிறார். ஏனென்றால் செழியன் பொறுத்தவரையும் இந்த வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நிம்மதியே இல்லை என்ற ஒரு எண்ணம் இருக்கிறது.

அதனால் ஒன்றுமே சொல்லாமல் மௌனமாகவே நின்று விடுகிறார். பிறகு பாக்கியா ஹோட்டலுக்கு சென்று சீல் வைத்திருப்பதை பார்த்து பீல் பண்ணுகிறார். அந்த இடத்திற்கு எழில் மற்றும் பழனிச்சாமி வந்து பாக்யாவை ஆறுதல் படுத்துகிறார்கள். ஆனால் 8 லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் பாக்யாவிற்கு உதவி செய்யும் விதமாக பழனிச்சாமி பணம் கொடுக்க தயாராக இருக்கிறார்.

ஆனால் பாக்கியா அந்தப் பணத்தை வாங்க மறுத்து விடுகிறார். நான் ஏதாவது ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொல்லி வேண்டாம் என மறுக்கிறார். இதனை அடுத்து செழியன் ஆபீஸில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஜெனி போன் பண்ணி அத்தை இப்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். இந்த நேரத்தில் நீ தான் உதவ வேண்டும் என்று சொல்லி 8 லட்ச ரூபாய் பணத்தை உன்னுடைய சேவிங்கில் இருந்து கொடு என்று கண்டிஷனாக சொல்கிறார்.

இதை கேட்ட செழியன் ஏற்கனவே ஆபீஸ்ல ஏகப்பட்ட பிரச்சனை. இப்பொழுது என்னால் அந்த பணத்தை எடுத்துக் கொடுக்க முடியாது என்று ஜெனி சொன்னதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார். உடனே ஜெனி, அதையெல்லாம் யோசிக்காமல் இப்பொழுதே கொடு என்று டார்ச்சர் பண்ணும் பொழுது செழியனின் மேல் அதிகாரி கூப்பிடுகிறார். அந்த நேரத்தில் செழியனுக்கு இனி அங்கே வேலை இல்லை என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.

ஏற்கனவே செழியன் சுயநலமாக யோசிப்பார். இப்பொழுது கையில் வேலையும் இல்லை என்றால் நிச்சயம் சேர்த்து வைத்த பணத்தை எடுத்து அம்மாவுக்கு உதவி செய்ய முன்வர மாட்டார். அதே நேரத்தில் செழியனின் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோபியும் பாக்யாவிற்கு உதவ வேண்டாம். அந்த பணம் உனக்கும் உன்னுடைய குழந்தைக்கு ரொம்ப முக்கியம் என்று சொல்லி செழியன் மனதை மாற்றி பாக்யாவிற்கு எல்லா பக்கத்திலும் பிரச்சினை கொடுக்கும் அளவிற்கு காய் நகர்த்தப் போகிறார்.

- Advertisement -spot_img

Trending News