கோபியின் வயிற்றெரிச்சலும் பொறாமையும்.. பாக்கியா பழனிச்சாமியின் தரமான சம்பவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் தற்போது கோபியின் நடிப்பை வைத்து விறுவிறுப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் அதற்கு ஏற்ற மாதிரி ரியாக்ஷன் கொடுத்து அனைவரையும் கவர்ந்து விட்டார். பாக்கியா எந்த விதத்திலும் செட்டாகாது என்று நினைத்து அவரை விட்டு ஒதுங்கி ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் கோபி. ஆனாலும் ஒவ்வொரு நாளும் சந்தோஷம் இல்லாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் விட்டுட்டு போன பாக்கியா தினமும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து பொறாமை படுகிறார். கோபியின் நினைப்பு எப்படி இருக்கிறது என்றால் பாக்கியா வேண்டாம் என்று தானே போனோம். ஆனால் நம்மளை நினைத்துக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இப்பொழுது சுதந்திரமாக ஆசைப்பட்டதை செய்து எந்தவித தடங்களும் இல்லாமல் நிம்மதியாக இருக்கிறார் என்று வயிற்றெரிச்சல் பட்டு வருகிறார்.

Also read: குடும்பத்தின் முன் கோபியை கலாய்க்கும் பழனிச்சாமி.. ஆவேசத்தின் உச்ச கட்டத்தில் ராதிகா

அதற்கேற்ற மாதிரி பாக்கியா கோபியை நினைத்து மூளையில் உட்காராமல் தைரியத்துடன் ஒவ்வொரு விஷயங்களையும் செய்து கோபிக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக அவரை மாத்தி கொண்டு தான் சிறப்பு. இவருக்கு துணையாக தற்போது தோள் கொடுக்கும் தோழனாக பழனிச்சாமி இருப்பதை பார்க்கும் பொழுது இவர்களுடைய காம்பினேஷன் பக்காவாக இருக்கிறது.

மேலும் இவர்களுடைய நட்பை பாக்யாவின் மாமியார் சரியாக புரிந்து கொண்டது அதை ஏற்றுக் கொண்டது இன்னும் நன்றாக இருக்கிறது. அதனால் பழனிச்சாமி தற்போது பாக்கியாவின் குடும்பத்துடன் ஒருவராக வந்து விட்டார். கோபியின் வீட்டிலேயே பழனிச்சாமி மற்றும் பாக்கியா இருவரும் சகஜமாக பேசிக் கொள்கிறார்கள்.

Also read: குணசேகரனை ஏமாற்றும் ஜனனியின் புதிய திட்டம்.. கதிரின் அடாவடித்தனத்துக்கு சரியான பதிலடி

அதாவது பழனிச்சாமிக்கு பாக்கியா ஒரு ஸ்வீட் செய்து கொடுக்கிறார். அப்பொழுது அவர் உங்க மாமனார் மாமியார் உங்களைப் பற்றி ரொம்பவே புகழ்ந்து பேசுகிறார்கள் என்று சொல்கிறார். பின்பு பாக்கிய அந்த ஸ்வீட் எடுத்து அவருக்கு சாப்பிட கொடுக்கிறார். அதற்கு பழனிசாமி ரொம்ப அருமையாக இருக்கிறது என்று சொல்லி உங்க கை பக்குவம் செமையாக இருக்கிறது என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதை பார்த்த கோபி என்னடா வர வர இவங்களோட அட்டகாசம் தாங்கவே முடியல. வீட்டுக்கு வந்தவன் இப்பொழுது அடுப்பங்கரை வரை வந்து இவ்வளவு சகஜமாக பேசிக் கொண்டிருக்கிறான் என்று புலம்புகிறார். இப்படி அவர்கள் இருவரும் பேச பேச அங்கே இருந்து கோபி ஒவ்வொரு ரியாக்ஷன் கொடுத்து பொறாமையில் பொங்கி தவிக்கிறார். இதை பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

Also read: குணசேகரனுக்கு எதிரான சூழ்ச்சியில் ஒட்டுமொத்த குடும்பம்.. அல்லக்கை கதிருக்கு சரியான ஆப்பு வைக்கும் ஜனனி

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்