ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ராதிகாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோபி.. சந்தோஷமாக வேடிக்கை பார்க்கும் ஒட்டு மொத்த குடும்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் மக்கள் ஆதரவை பெற்று விரும்பி பார்க்கிற சீரியலாக வருகிறது. இதில் ராதிகா, பாக்யாவை எப்படியாவது எல்லா விதத்திலும் அவமானப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் ஆபிஸை பகடைக்காயாக யூஸ் பண்ணி பாக்யாவை சீண்டி பார்க்கிறார். இத்தனை நாளாக அமைதியா பொறுத்துக் கொண்டிருந்த பாக்கியா ராதிகாவின் ஹெட் ஆஃபீஸரிடம் சொல்லிவிட்டார்.

அவர்கள் பாக்கியா முன்னாடியே ராதிகாவை கூப்பிட்டு எச்சரிக்கை விடுத்து விட்டார். பிறகு ஆபீஸில் நடந்த விஷயத்தை வீட்டிலும் வந்து குடும்பத்தில் அனைவரிடம் பாக்கியா சொல்லிவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த கோபியின் அம்மா ராதிகா வந்ததும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார். இந்த நேரத்தில் கோபி ஆபிஸை முடித்து விட்டு வந்து வீட்டு வாசலில் நின்று சத்தத்தை கேட்டு பெரிய பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கு கண்டிப்பா இது ராதிகா தான் காரணமாய் இருப்பார் என்று பயத்துடன் வீட்டுக்குள் வருகிறார்.

Also read: கண்ணனின் பேராசையால் ஜெயிலுக்கு சென்ற கதிர்.. சல்லி சல்லியாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிறகு பாக்கியாவின் மாமியார் ராதிகாவை பற்றி சொன்னதும் கோபி அடுத்த நிமிஷமே ராதிகாவிடம் சண்டை போட்டு நீ இந்த வீட்டுக்கு வந்ததுக்கு பிறகு தான் இந்த குடும்பத்துடன் நிம்மதியே போய்விட்டது. இதுக்கு முன்னாடி இந்த குடும்பம் எப்படி இருக்கும் உனக்கு தெரியுமா, ஆனால் அது மாதிரி எல்லாம் இப்போ இல்ல. எப்ப பார்த்தாலும் சண்டை சண்டை இதுக்கெல்லாம் காரணம் நீ தான் என்று சொல்லிவிடுகிறார்.

இதனால் ஆவேசமாக மாடிக்கு போய்விடுகிறார் ராதிகா. பிறகு பின்னாடியே கோபி மேலே போகிறார். ருத்ரதாண்டவம் ஆடும் ராதிகாவை எவ்வளவோ சொல்லி சமாதானப்படுத்த பார்க்கிறார். ஆனால் கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காத ராதிகா மறுபடியும் பிரச்சினை பண்ணும் அளவிற்கு சண்டை போடுகிறார். ஒரு கட்டத்தில் கோபிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உனக்கு பிடிக்கவில்லை என்றால் வீட்டை விட்டு நீ தாராளமாக வெளியே போகலாம் என்று சொல்லிவிடுகிறார்.

Also read: இவ மானங்கெட்ட கேள்வி கேட்டாலும் கோபமே வர மாட்டேங்குது.. குணசேகரன் பம்மும் ஒரே ஆன்ட்டி

இதைக் கேட்டு அதிர்ச்சியான ராதிகா இனிமேல் நான் உங்களுக்கு வேண்டாம் அப்படித்தானே சரி நான் வெளியில் போகிறேன் என்று சொல்ல, உடனே கோபி இல்லை ராதிகா நான் ஏதோ வாய் தவறி சொல்லிவிட்டேன் என்று சமாதானப்படுத்துகிறார். ஆனால் ராதிகா, கோபியை தள்ளிவிட்டு அவருடைய வீட்டிற்கு போய்விடுகிறார். இதற்கிடையில் செல்வி அக்கா, ராதிகா எங்கே போகிறார் என்று பின்னாடியே போய் பார்க்கிறார்.

பிறகு ராதிகா அவருடைய வீட்டிற்கு வந்து அம்மாவை பார்த்து நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லுகிறார். நான் இங்கேயே இருக்கிறேன் என் பொண்ணு மட்டும் எனக்கு போதும் பாவம் என்னால் அவளும் கஷ்டப்பட்டுட்டு இருக்கா என்று சொல்கிறார். ஆனால் அதற்கு இவருடைய அம்மா இதெல்லாம் ஒரு பிரச்சனையா இதுக்கெல்லாம் நீ வீட்டுக்கு வரலாமா. எப்படி பாக்கியா நல்லவளாக நடிச்சு அங்கேயே இருக்கிறார். அதே மாதிரி நீயும் நல்லவளா நடிக்கணும் என்று சொல்லி மறுபடியும் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

Also read: பாக்யாவை அலைக்கழிக்கும் ராதிகா.. கடைசியில் கிடைத்த மிகப்பெரிய ஆப்பு

- Advertisement -

Trending News