எழிலுக்கு முடித்துவிட்டு நான் பண்ணிக்குறேன்.. நெஞ்சு வலியில் துடிக்கும் கோபியின் அம்மா!

விஜய் டிவியின் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஏனென்றால் கல்லூரி காதலி ராதிகாவுடன் தொடர்பில் இருந்த கோபியை பற்றி கோபியின் அப்பா மற்றும் எழில் இருவருக்கும் தெரியவந்துள்ள நிலையில், இப்பொழுது மயூ மூலம் பாக்யா, இனியா, கோபியின் அம்மா, ஜெனி உள்ளிட்ட அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

ஏனென்றால் பாக்யா வீட்டிற்கு வந்துள்ள மயூவிடம் கோபியின் அப்பா, பாக்யா மற்றும் கோபி இருவரும் இருக்கும் புகைப்படத்தை காண்பித்து ‘இந்த அங்கிள் யாருன்னு தெரியுதா?’ என்று கேட்க, இவங்களை தான் என்னுடைய அம்மா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் இவங்க கோபி அங்கிள் என்று கூற, உடனே இனியா என்ன மயூ சொல்ற, இது என்னுடைய அப்பா என்று கூறுகிறார்.

எனவே மயூ கூறுவது பொய்யல்ல என்பதை பாக்யா உட்பட பலரும் உணர்ந்தபடி ஷாக்காகி உள்ளனர். அத்துடன் இதைக்கேட்டதும் கோபியின் அம்மாவிற்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. எனவே இந்த சம்பவங்கள் எல்லாம் அடங்கிய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஒருவேளை தற்போது நடப்பதெல்லாம் கனவாக கூட இருக்கலாம். கோபியின் அப்பா இதையெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். அதன்பிறகு கோபியிடம் கடைசியாக ஒருமுறை பேச போன கோபியின் அப்பாவிடம் கோபி, ‘செழியனுடைய வாழ்க்கை செட்டில் ஆயிடுச்சு.

இனியாவின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்கிறேன். அத்துடன் எழிலின் திருமணத்தை நடத்திய பிறகுதான் நான் ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன்’ என்று சொல்ல, இதை கேட்டதும் தாங்கமுடியாத கோபியின் அப்பா, ‘நீ எப்ப வேணாலும் இந்த குடும்பத்துக்கு துரோகம் செய்துவிட்டு போகத்தான் போகிறாய் ஆகையால் குடும்பத்தினருக்கு இப்பவே போய் உண்மைகளை சொல்லுகிறேன். என்று ஆத்திரத்துடன் கீழே செல்கிறார்.

இவ்வளவு நாள் அப்பாவை கண்டு பயப்படாத கோபி இந்த சமயம் பயப்படுகிறார். அத்துடன் ஆத்திரத்தில் கீழே சென்ற கோபியின் அப்பா குடும்பத்தினரின் சந்தோஷத்தை கெடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அமைதியாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அடங்கியிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் விரைவில் கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் அரங்கேற உள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை