நல்ல இயக்குனர்களை நோகடிக்கும் ஹீரோக்கள்.. டானாக்காரன் தமிழை சுற்றலில் விட்ட சூர்யா குடும்பம்

சமீபத்தில் தியேட்டரில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் மகாராஜா ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதன் இயக்குனர் நிதிலன் சாமிநாதன் கிட்டத்தட்ட ஏழு வருடம் கழித்து கடின போராட்டத்திற்கு பின் இந்த படத்தை எடுத்துள்ளார்.

இவர் இதற்கு முன் எடுத்த படம் குரங்கு பொம்மை. இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சஸ்பென்ஸ் திரில்லராக வந்த இந்த படத்தில் விதார்த், பாரதிராஜா என எல்லோரும் கனகச்சிதமாக நடித்திருப்பார்கள்.

2017 ஆண்டு வெளிவந்த இந்த படத்திற்கு பின் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தான் மகாராஜா படத்தை எடுத்துள்ளார் நித்திலன் சுவாமிநாதன். மகாராஜா படத்திற்காக அவர் நிறைய ஹீரோக்களை அணுகியுள்ளார், ஆனால் அவர்கள் யாரும் இந்த கதையில் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லையாம். கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து எடுத்துள்ளார்.

டானாக்காரன் தமிழை சுற்றலில் விட்ட சூர்யா குடும்பம்

நித்திலன் சுவாமிநாதன் போலவே 2022 ஆம் ஆண்டு வெளிவந்த படம் டானாக்காரன். இந்த படத்தையும் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் தமிழ். இவர் அசுரன், ஜெய் பீம், விடுதலை போன்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் தமிழும் இப்பொழுது சூர்யாவின் தம்பி கார்த்தியை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார். பொதுவாக சூர்யா மற்றும் கார்த்தியை வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் ஏகப்பட்ட வரைமுறைகள் இருக்கிறது. பல நேர்முக இன்டர்வியூகள் சந்தித்தபின் தான் இவர்களை அணுக முடியும் .

இப்படி நல்ல இயக்குனர்கள் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை அருமையான கதைகளை வைத்துக்கொண்டு காத்துக் கிடக்கின்றனர் . இப்பொழுது உள்ள ஹீரோக்கள் பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். சின்ன தரமான இயக்குனர்களையும் நல்ல கதைகளையும் கண்டு கொள்வதில்லை.

Next Story

- Advertisement -