கோபி அங்கிள் உங்க நிலைமையை பார்த்தால் ரொம்ப கேவலமா இருக்கு.. பொண்டாட்டி அருமை புரியுதா?

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் நாளுக்கு நாள் கோபியின் அட்டகாசம் அதிகமாகிக் கொண்டே போகிறது. பாக்யா வீட்டிற்கு எதிர் வீட்டில் குடித்தனம் வந்திருக்கும் கோபியின் செயலைக் கண்டு அவரது குடும்பம் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர்.

அதாவது பாக்யாவை வெறுப்பேத்துவதற்காக தான் கோபி இங்கு வந்துள்ளார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். நிஜத்தில் பாக்யா குடும்பம் சந்தோஷமாக இருப்பதை பார்த்து கோபித்தான் வயிற்றெரிச்சல் படப்போகிறார். அதாவது வீட்டுக்கு வரும் கோபியை கண்டு கொள்ளாமல் ராதிகா யாருடனோ போனில் பேசி கொண்டிருக்கிறார்.

Also Read :வெடிக்கும் சக்களத்தி சண்டை.. பாரதிகண்ணம்மா சீரியல் ஏற்படும் அதிரடி திருப்பம்

இதைத்தொடர்ந்து கோபி மயூக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். அப்போது பசியால் தவிர்த்து வரும் கோபி மயூவிடம் பசிக்கிறதா என்று கேட்க ஆமாம் எனக்கும் லைட்டா பசிக்குது என கூறுகிறார். உடனே ராதிகா ஆர்டர் பண்ணி சாப்பிட்டு இருக்கலாமே என கூறுகிறார்.

அதன் பின்பு ராதிகா சமையல் செய்ய செல்கிறார். மறுபுறம் பாக்யா தனக்கு சமையல் ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் வீட்டில் எல்லோருக்கும் சிக்கன் பிரியாணி என விதவிதமாக சமைத்து வைத்துள்ளார். அந்த பிரியாணி வாசனை கோபி வீட்டு வரைக்கும் செல்கிறது.

Also Read :கத்தியை கையில் எடுத்த மகன்.. ராதிகா 3வது புருஷன் தேட நேரம் வந்துடுச்சு

இதனால் ராதிகா பிரியாணி தான் சமைத்து வைத்திருப்பார் என்ற சந்தோஷத்தில் கோபி இருக்கிறார். மேலும் டைனிங் டேபிளில் சாப்பிட வரும் கோபிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது சின்ன பவுலில் நூடுல்ஸ் போன்ற ஏதோ ஒரு உணவை ராதிகா சமைத்து எடுத்து வந்துள்ளார்.

இதுதான் சாப்பாடு என்று சொன்னவுடன் விருப்பம் இல்லாமல் கோபி சாப்பிடுகிறார். பாக்கியா உடன் இருக்கும்போது அறுசுவை சாப்பிட்ட கோபியின் நிலைமை தற்போது நாளுக்கு நாள் மோசமாகி உள்ளது. எப்பவது பொண்டாட்டி பாக்யாவின் அருமை கோபிக்கு புரியவரும்.

Also Read :2வது விவாகரத்துக்கு ரெடியான கோபி.. ராதிகா, ஹனிமூன் வந்த என்ன பைத்தியமாக்கிட்டா

- Advertisement -