சைக்கோவை பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் பாக்யா.. சூனியக்காரியாக அக்கப்போர் பண்ணும் மாமி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலை பார்த்தாலே டென்ஷன், பிபி, பிரஷர் எல்லாம் ஏறிடும். அந்த அளவிற்கு மட்டமான கதையை வைத்து உருட்டி வருகிறார்கள். கோபி மட்டும் பிள்ளைகளைப் பற்றி கவலைப்படாமல் 45 வயசிலும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ராதிகா பின்னாடி அலைஞ்சு திரிஞ்சு கல்யாணம் பண்ணியதெல்லாம் மறந்துட்டாரு போல.

ஆனா பாக்கியா குடும்பத்துக்காக தனி ஒரு ஆளாக நின்னு ஜெயித்து போராட வேண்டும் என்று நினைக்கிறது மட்டும் தப்பு என்று சைக்கோ மாதிரி அடாவடி பண்ணுகிறார் கோபி. இதுல உண்ட வீட்டுக்கே ரெண்டாகும் பார்க்கும் மாமியார் வேற. பிள்ளை மேல பாசம் இருக்க வேண்டியது தான். அதுக்காக ஓவரா அட்டூழியம் பண்ணிக்கிட்டு பாக்யாவிற்கு எதிராகவே நின்னு சண்டை போடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்.

இதுவரை கோபி நடிப்பு நெகட்டிவ் ஆக இருந்தாலும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. அத்துடன் இவருடைய நடிப்பை பார்ப்பதற்காகவே பாக்கியலட்சுமி சீரியல் பார்த்தவர்கள் தான் அதிகமானவர். ஆனால் தற்போது கொடூரமாகவும் வில்லத்தனத்தின் மறு உருவமாக நடவடிக்கை எல்லாத்தையும் மாற்றிக் கொண்டு பேசுவது பார்க்க சகிக்கவில்லை. அத்துடன் பழனிச்சாமி முன் என்னை வீட்டை விட்டு வெளியே போ என்று பாக்கியா சொல்லிவிட்டார் என அம்மாவிடம் சின்ன பிள்ளை மாதிரி கம்ப்ளைன்ட் பண்ணுகிறார்.

Also read: குணசேகரன் மூஞ்சியில் கரியை பூச போகும் ஈஸ்வரி.. சாருபாலா ஜனனி சேர்ந்து போட்ட பிளான்

அதே மாதிரி நடக்காத விஷயத்தை எல்லாம் கட்டுக்கதை கட்டி பாக்கியா மீது தான் தவறு இருக்கு என்பது போல் கோபி சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு மாமியாரும் பாக்கியாவிடம் கேள்வி கேட்கிறார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது மாமியார் புருஷன் என்று கூட பார்க்காமல் கன்னத்தில் ஓங்கி அரையறைந்து வெளியே பாக்கியா அனுப்பியிருந்தால் மனசுக்குள்ள குளு குளு என்று ஆனந்தம் அடைந்திருக்கும்.

அதை விட்டுவிட்டு இவ்வளவு பொறுமையாக பாக்கியா இருப்பது எரிச்சலை உண்டாக்குகிறது. இவர் தான் இப்படி என்றால் செழியன் அதுக்கு மேல. பழனிச்சாமி இருக்கும்பொழுது பாக்யாவிடம் கோபி பேசிக் கொண்டிருப்பதை பார்த்த செழியன் அந்த நிமிடத்திலேயே கேள்வி கேட்டு இருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு தூரத்துக்கு வந்து இருக்காது.

அதையெல்லாம் விட்டுவிட்டு பாய்ண்ட் வரட்டும் என்று காத்திருந்து கடைசி நிமிடத்தில், நான் அந்த இடத்தில் தான் இருந்தேன் அப்பா மேல தான் தவறு என்று சொல்வது சின்ன பிள்ளையாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் பாக்கியா பூமாதேவி மாதிரி பொறுமையாக இருப்பது செட்டாகவில்லை. அடுத்து கோபியும் மாமியாரும் லாஜிக்கே இல்லாமல் பாக்கியாவிடம் பேசுவது சகிக்கவில்லை. கடைசியாக இந்த நாடகமே பார்ப்பதற்கு பிடிக்கவில்லை என்பதற்கு ஏற்ப நன்றாக இல்லை.

Also read: டிஆர்பி இல்லாததால், 350 எபிசோடுகளைக் கடந்த சீரியலை ஊத்தி மூடும் விஜய் டிவி.. அதிரடியாக என்ட்ரியாகும் புத்தம் புது சீரியல்