கோட் பட ரிலீஸ்க்கு வந்த புது சிக்கல்.. பெரிய அப்செட்டில் வெங்கட் பிரபு மற்றும் விஜய்

கோட் படத்தில் விஜய் போர்ஷன் எல்லாம் முடிந்துவிட்டது. போஸ்ட்ப் ரொடெக்ஷன் வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் வெங்கட் பிரபு மற்றும் விஜய்க்கு இடி போல் ஒரு செய்தி வந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதியை வெங்கட் பிரபு வெளியிட்டிருந்தார்.

அதாவது செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே ரிலீஸ் செய்தியை குறிப்பிட்டு தான் மொத்த சூட்டிங் நடைபெற்றது. இப்பொழுது இந்த ரிலீஸ் தேதிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது சனிக்கிழமை அன்று கொண்டாடப்படும் விழாவிற்கு ஏற்றார் போல் வியாழக்கிழமை அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்தால் அந்த நான்கு விடுமுறை நாட்களில் கலெக்சனை அள்ளிவிடலாம் என வெங்கட் பிரபு திட்டம் தீட்டி அந்த தேதியை செலக்ட் பண்ணினார்.

இப்பொழுது அந்த குறிப்பிட்ட தேதியில் கோட் படம் வெளி வருமா என்பது சந்தேகம்தான். இந்த படத்தில் விஜய்யை மிக இளமையாக “டி ஏஜிங்”எனப்படும் டெக்னாலஜி மூலம் சின்ன பையன் போல் காட்டுகிறார்கள். அந்த வேலைகள் எல்லாம் மீதம் இருக்கிறது. மொத்தமும் முடிவடைய ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை ஆகிவிடுமாம்.

பெரிய அப்செட்டில் வெங்கட் பிரபு மற்றும் விஜய்

அடுத்து 25 நாட்கள் தான் மீதம் இருக்கிறது இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு. அதன் பிறகு இந்த படத்தில் நிறைய வேலைகள்மீதம் இருக்கின்றதாம். இது 25 நாட்களுக்குள் முடிவடைய சாத்தியமே இல்லை. ஆனால் இந்த படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்றும். தீபாவளி நேரத்தில் தான் சாத்தியமாகும் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 10ஆம் தேதி முன்பு இந்த வேலைகள் முடிவடையவது சிரமம். அதனால் வெங்கட் பிரபு மற்றும் விஜய் தரப்பு திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகுமா என்பதில் மிகுந்த டென்ஷனில் இருக்கிறது. “டி ஏஜிங்” விஜய்க்கு மட்டும் என்றால் எளிதாக முடிந்துவிடும் ஆனால் இந்த டெக்னாலஜியில் படத்தில் தோன்றும் விஜய் நண்பர்களாகிய பிரசாந்த், பிரபுதேவா ஆகியவர்களையும் இளமையாக காட்டுவதால் தான் இந்த சிக்கல்.

Next Story

- Advertisement -