ஜெமினி கணேசன்- சாவித்திரியின் பேரன் பிக்பாஸ் சீசன்5 போட்டியாளர்! அதுவும் கமலுக்கு நெருக்கமானரும் கூட

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு முதல் முதலாக துவங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி கொரோனா காரணமாக சற்று தாமதமாகவே தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஏழாவது போட்டியாளராக ஜெமினி கணேசன்- சாவித்திரி இவர்களின் பேரன் அபினய் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவரை அறிமுகம் செய்யும்போது உலகநாயகன் கமலஹாசன், ‘களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்த ஜெமினி கணேசன் சாவித்திரி அவர்களின் பேரன் அபினய் அவர்களை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

அத்துடன், சாவித்ரி அம்மாவின் மூத்த மகன் நான்தான் என்றும், ஆகையால் சாவித்திரி அம்மாவின் பேரனுக்கு, நான் மாமா அல்லவா? எனவே அபினய்க்கு நான் ஒருவகையில் மாமா என்று கூறி கமலஹாசன் பிக்பாஸ் மேடையில் நெகிழ்ந்துள்ளார்.

நடிகர் அபினய் கணித மேதை ராமானுஜம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் ராமானுஜமாகவே நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு போன்ற ஒரு சில படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

bb5-abinay-cinemapettai
bb5-abinay-cinemapettai

மேலும் தற்போது நடிகர் அபினய் விவசாயம் செய்ய இயலாத ஏழை மக்களிடம் இருந்து நிலங்களை லீசிற்கு எடுத்து அந்த நிலங்களின் உரிமையாளர்கள் வைத்தே விவசாயம் செய்து வருகிறாராம்.

இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அபினய்க்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்