ரவுடிகளுக்கு அவர் மொழியில் பதிலடி கொடுக்கணும்.. மிரள வைக்கும் அருண் IPS-யின் பின்னணி

GCC commissioner Arun IPS: சென்னை மாநகராட்சியின் காவல் ஆணையர் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறார். சந்திப் ரத்தூர் IPS அதிரடியாக மாற்றப்பட்டு, சட்டம் ஒழுங்கு நடவடிக்கையின் கூடுதல் பொறுப்பாளராக இருந்த அருண் IPS தற்போது சென்னை மாநகராட்சியின் காவல் ஆணையர் ஆகியிருக்கிறார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொடூர கொலைக்கு பிறகு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பற்றி இந்திய அளவில் கேள்வி எழுந்து விட்டது. முதலமைச்சர் கீழ் இருக்கும் காவல்துறையே சரியாக இல்லை என எதிர்க் கட்சிகளும் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டன.

ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சாவு, போதை பொருள் கடத்தல் என தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதை கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

மிரள வைக்கும் அருண் IPS-யின் பின்னணி

புதிய ஆணையர் அருண் IPS நேற்று முதல் பதவியேற்று இருக்கிறார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி மெக்கானிக் இன்ஜினியரிங் படித்தவர். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

1998 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர் நாங்குநேரி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் காவல் துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கரூர் கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

அண்ணா நகர் மற்றும் செயின்ட் தாமஸ் பகுதியில் துணை ஆணையராக பணியாற்றினார் 2016ல் திருச்சி மாவட்ட ஐஜியாகவும், 2022 இல் ஆவடியில் காவல் ஆணையராகவும் பணியாற்றினார். இவர் வேலை செய்த அத்தனை மாவட்டங்களிலும் ரௌடிகளை அடக்கி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி இருக்கிறார்.

இதனால்தான் தற்போது இவரை சென்னை மாநகர ஆணையராக பணிய அமர்த்தி இருக்கிறார்கள். இவர் வந்த பிறகு சென்னையில் ஏற்பட போகும் மாற்றத்தை இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.

Next Story

- Advertisement -