சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மாதவன் மகனைப் போல பட்டையை கிளப்பும் கௌதம்மேனனின் மகன்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா.?

முன்னணி இயக்குனரான கௌதம் மேனனின் மகன் செய்த சாதனை பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது. கௌதம் மேனன், தமிழில் வெளியான மின்னலே திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

அதன்பின், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கௌதம் வாசுதேவ் மேனனுக்கு திருமணமாகி பிரீதி மேனன் என்ற மனைவியும் துருவ், ஆர்யா யோகன் மேனன், ஆதித்யா என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இதனிடையே மூத்த மகனான ஆர்யா யோகன் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் இடம்பெற்று இந்த வருடம் அறிமுகமாகியுள்ளார்.

வருடம் தோறும் நடைபெறும் இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களின் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த இந்த வருடத்திற்கான போட்டி கடந்த ஜூன் 23ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் விளையாடின.

இதில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி சார்பாக பந்து வீச்சாளராக அறிமுகமான ஆர்யா யோகன், முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் அடுத்தடுத்த பந்துகளில் ரன் அவுட் செய்து,நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இவரது பெயர், இதன் மூலமாக பிரபலமான நிலையில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் மகன் என்று தெரிந்தவுடன் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல இயக்குனர்களின் மகன், மகள்கள் நடிகர்களாக விரும்புவார்கள். ஆனால் ஆர்யா யோகன் மேனன் கிரிக்கெட்டில் சாதனை படைக்க ஆர்வம் காட்டி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

Trending News