ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்த கௌதம் மேனன்.. காப்பாற்றிவிட்ட விஜய் பட தயாரிப்பாளர்

ஆரம்பத்தில் படங்களை இயக்குவதில் மும்பரமாக இருந்த கௌதம் மேனன் சமீபத்தில் வரும் படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இப்பொழுது லியோ படத்தில் கௌதம் மேனன் நடித்து வருகிறார். இதனை அடுத்து தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படி நடிகராக அவதரித்த இவருக்கு பழைய பிரச்சினை ஒன்று இவரை சுற்றி வருகிறது. அதாவது கௌதம் மேனன், தயாரிப்பாளர் பாலு என்பவரிடம் படத்தை இயக்குவதாக கூறி அதற்காக கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி இருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக கொரோனா காலத்தில் அந்த தயாரிப்பாளர் இறந்து விட்டார்.

Also read: 5 வருடம் கிடப்பில் போட்ட படம் .. காஷ்மீரில் இருந்து கௌதம் மேனன் வெளியிட்ட தரமான ரிலீஸ் அப்டேட்

பின்பு கௌதம் அவர்களின் குடும்பத்திடம் அந்த பணத்தை நான் கூடிய சீக்கிரம் திருப்பித் தருகிறேன் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார். ஆனால் அதோட சரி அதற்குப் பிறகு இன்று வரை அதைப்பற்றி எதுவுமே பேசவில்லை. இவர் பணத்தை கொடுப்பார் என்று காத்து இருந்த குடும்பத்தினர் வேறு வழி தெரியாமல் நேரடியாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

பின்பு தயாரிப்பாளர் சங்கத்தில் இதைப் பற்றி ஆலோசனை நடைபெற்றிருக்கிறது. அதாவது இப்பொழுது கௌதம் நன்றாக நடித்து வருகிறார் நிறைய சம்பாதிக்கவும் செய்கிறார். ஆனால் பணத்தை கொடுக்க மட்டும் மனசு வரவில்லை என்று முடிவு செய்து தயாரிப்பு சங்கம் ரெட் கார்டு கொடுக்கலாம் என்று முடிவு செய்தது.

Also read: கௌதம் மேனன் கதையில் தலையை விட்ட சிம்பு.. VTV-2 படத்திற்கு போட்ட ஸ்கெட்ச்

இதை தெரிந்து கொண்ட லியோ படத்தின் தயாரிப்பாளர் இவரை காப்பாற்றுவதற்கு முன் வந்திருக்கிறார். அதாவது அந்த குடும்பத்திற்கு இவருடைய சம்பளத்திலிருந்து 30 லட்சம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இனிமேல் கௌதம் மேனன் நடிக்கும் படங்களில் அவரது தயாரிப்பாளர்கள் இதே மாதிரி சம்பளத்தை கொடுக்க முன்வர வேண்டும் என்று கூறிவிட்டு ரெட் கட்டை தவிர்த்து விட்டார்கள்.

மேலும் லியோ படத்தின் தயாரிப்பாளர் மட்டும் சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்து உதவி செய்யவில்லை என்றால் கௌதம் மேனன் நிலைமை வடிவேலு மாதிரி தான் ஆயிருக்கும். இவருக்கு வந்த பெரிய கண்டத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தார் என்றே சொல்லலாம். சும்மாவா சொல்லுவாங்க முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று.

Also read: படம் பயங்கரமா இருக்கு.. மொத்த ஸ்கிரிப்ட்டையும் போட்டுடைத்த லியோ படத்தின் வசனகர்த்தா

- Advertisement -

Trending News