மத்தளம் போல் அடிவாங்கும் அப்பத்தா.. மொய் விருந்துக்கு பின் குணசேகரன் படும் அசிங்கம்

Gunasekaran: மொய் விருந்தில் குணசேகரன் பட்ட அசிங்கத்தால் ஜான்சி ராணி மற்றும் கரிகாலனுக்கு செம டோஸ் கொடுத்துவிட்டு அதே கோபத்தோடு வீட்டுக்கு வருகிறார். வந்த உடனேயே அவருக்கு அப்பத்தா செய்த காரியத்தால் மீண்டும் கோபம் தலைக்கு ஏறியது.

மொய் விருந்துக்கு வந்த உறவினர்கள்,குணசேகரன் இல்லாவிட்டால் நீங்கள் எல்லாம் பூஜ்ஜியம் என நந்தினி சொந்தங்கள் சொல்லிய உடனே ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கதிர், அவர்களை அங்கிருந்து கண்டபடி பேசி விரட்டுகிறார். மேலும் 100, 200 என பிரிந்த காசுகளை தூக்கி அடிக்கிறார்.

கதிர் மற்றும் நந்தினி கதறிஅழுகையில், ஈஸ்வரி தன்னுடைய வளையல்கள், சங்கிலிகளை கழற்றி அதில் மெய்யாக வைக்கிறார். மேலும் நந்தினியின் அப்பா தன் பெயரில் உள்ள இடத்தின் பத்திரத்தை அதில் வைக்கிறார். ஞானசேகரன் பல 500 ரூபாய் கட்டுகளை அதில் வைக்கிறார். இப்படி ஒரே அழுகாட்சி சென்டிமென்டாக அமைந்தது தாரா காதுகுத்து விழா.

மொய் விருந்துக்கு பின் குணசேகரன் படும் அசிங்கம்

இதை எல்லாத்தையும் கவனித்து இவர்கள் மேலும் ஒற்றுமையாகவும், வலிமையாகவும் இருக்கிறார்களே என்று ஆத்திரத்தில் ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் இருவரையும் வாய்க்கு வந்தபடி திட்டி விட்டு ஆத்திரத்தில் வீட்டுக்கு நடையை கட்டுகிறார் குணசேகரன்.

வீட்டில் பேத்தி பாசத்தில் விசாலாட்சி அப்பத்தா அவரை கொஞ்சி, பூஜை அறைக்கு அழைத்துச் சென்று கையில் உள்ள காசுகளை எல்லாம் கொடுக்கிறார். இதை பார்த்த நந்தினி அப்பத்தாவிடம் உங்கள் பையன் எங்கள் வளர்ச்சியை தடுக்கிறார் என திட்டி தீர்க்கிறார்.இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது வீட்டிற்கு வந்த குணசேகரன் அம்மா செய்ததை பார்த்து, “நீ எந்த பக்கம்” என கடும் காண்டில் கத்துகிறார்.

காசு இல்லாததால் தம்பிகளையும் ஏளனமாய் பார்க்கும் குணசேகரன்

- Advertisement -