உயிருக்குப் போராடும் கேப்ரில்லாவின் கணவர்.. ஒரே வார்த்தையில் உயிர் கொடுத்த காதலி

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பிடிக்காத திருமணத்தை ஏற்றுக் கொண்ட காவியா தனது கணவர் பார்த்திபனை வெறுத்து ஒதுக்குகிறார். இருப்பினும் பார்த்திபன் காவியாவை மனதார காதலிப்பதால் அவருடைய மனதை ஆறு மாதத்தில் மாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய உண்மையான காதலை பலவிதங்களில் வெளிப்படுத்துகிறார்.

மேலும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில், அதற்காக பயிற்சி வகுப்பிற்கு சென்ற காவியா தீ விபத்தில் மாட்டிக் கொள்கிறார். தீயணைப்பு வீரர்களுடன் பார்த்திபனும் இணைந்து காவியாவை தேடி அவளை மீட்டு வருகிறார்.

இருப்பினும் பார்த்திபனுக்கு மூச்சுக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். காவியாவும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஆனால் காவியா உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

பார்த்திபன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்று மருத்துவர் கை விரிக்கின்றனர். இந்நிலையில் குடும்பமே அழுது புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில் காவியா, பார்த்திபன் அருகில் வந்து அவரை அன்போடு அழைக்க உடனே பார்த்திபன் கண்விழித்துப் பார்க்கிறார்.

உயிருக்குப் போராடிய கணவரை ஒரே வார்த்தையில் உயிர் கொடுத்த காவியாவின் கையை பார்த்திபன் இறுக்கமாக பிடிக்கிறார். காவியாவும் பார்த்திபன் கையை பிடித்து இருவரும் தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர்.

இவ்வளவு நாள் கணவரை படாதபாடுபடுத்திய காவியா ஒருவழியாக பார்த்திபனை ஏற்றுக் கொண்டதால் சீரியல் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். ஆனால் பார்த்திபன் குணமாகி வீட்டிற்கு வந்த பிறகு காவியா மீண்டும் சீர தான் போகிறார்.