பெட்ரூம் காட்சியை பார்த்து ஏங்கி போன கேப்ரில்லா.. இப்படிலாமாடா கதற விடுவீங்க!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலில் காவியா கதாபாத்திரத்தில் நடிக்கும் கேப்ரில்லா ஒரே வீட்டில் இருக்கும் காதலன் ஜீவாவை மறக்க முடியாமல், கணவருடன் சேர்ந்து வாழ தயங்குகிறார்.

காவியாவின் காதலை ஏற்கனவே தெரிந்து கொண்ட மாமியார், காவியாவை அவளுடைய கணவர் பார்த்திபனை விட்டு விலகும்படி சொல்கிறார். இதற்காக அவளை விடுதியில் சென்று படிக்கும்படி காவியாவை வற்புறுத்துகிறார்.

இப்படி திருமண வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து கொண்டிருக்கும் காவியாவிற்கு தன்னுடைய காதலன் ஜீவா மற்றும் அவளுடைய அக்கா பிரியாவுடன் கொஞ்சி குலவுவதை பார்க்கமுடியாமல் கலங்குகிறார்.

எதார்த்தமாக பிரியாவின் பெட்ரூமுக்கு சென்ற காவியா அங்கு ஜீவா மீது படுத்திருந்த பிரியாவின் ரொமான்ஸ் காட்சிகளை பார்த்த பின் துடி துடித்துப் போகிறாள். ஆசைஆசையாக காதலித்த காதலன் உடன் வாழ முடியலையே என காவியா மனதிற்குள்ளே கலங்குகிறார்.

இந்த சீரியலில் இப்படி ஒரு சீன் வைத்து பெட்ரூம் காட்சிகளுக்காக காவியாவை ஏங்க விடுவீர்களே என ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் ஜீவா- பிரியா இருவருக்கும் வில்லியாக காவியா மாறிவிடுவார் போல தெரிகிறது.

ஏனென்றால் இப்படிதான் காவியா இந்த சீரியலில் அத்தானும் அக்காவும் சேர்ந்து வாழ்வதை தாங்க முடியாமலும், அதைப்பார்த்து சகித்துக்கொள்ள முடியாத கதாபாத்திரமாகவே காட்டப்பட்டு கொண்டிருக்கிறார்.