சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ரோஜா முதல் பாரதிகண்ணம்மா வரை.. டாப் சீரியல்களை கமெண்டுகளால் கிழித்து தொங்க விடும் ரசிகர்கள்!

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் 5 இடத்தைப் பிடித்திருக்கும் சீரியல்கள் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா, ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி, ரோஜா ஆகியவை. இவற்றின் புதிய ப்ரோமோக்கள் அவ்வபோது வெளியாகி கொண்டே இருக்கும். அந்த ப்ரோமோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோவில் கண்ணன் மொட்டை அடித்து விட்டு தனது தாய்க்கு இறுதி சடங்குகளை மேற்கொண்டு வருகிறான். கண்ணன் தனது தவறை உணர்ந்து தனது தாய்க்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து வருகிறான். தற்போது அவன் திருந்தி விட்டான் ஆகையால், அவனை மன்னித்து வீட்டுக்குள் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

பாரதிகண்ணம்மா சீரியலில், பாரதி தனது தவறை உணர்ந்து திருந்தியது போல் காட்டிவிட்டு அதெல்லாம் வெறும் நடிப்பு என்பது போல் சீனில் ட்டுவிஸ்ட் வைத்துள்ளனர். பாரதியை பலரும் டாக்டர் பாரதி அல்ல சைக்கோ பாரதி என்றும், இந்த நாடகத்திற்கு கிளைமாக்சே தேவை இல்லை தயவு செய்து இத்துடன் முடித்து விடுங்கள் என்றும் இயக்குனர் கதையை ஜவ்வாக இழுத்து வருகிறார் என்றும் கேலி செய்து வருகின்றனர்.

top-serials-cinemapettai
top-serials-cinemapettai

பாக்கியலட்சுமி தொடரில், ஆர்டரை கையில் எடுத்த பாக்கியம் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்கு தாமதமாகி விடுகிறது. வீட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைக்கும் பாக்கியா தான் காரணம் என்பது போல் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் நீங்கள் சமைக்கும் ஐட்டங்கள் நன்றாக தான் இருக்கும் ஏனா நீங்க தான கதாநாயகி என்றும் தினசரி பாக்கியாவிற்கு திட்டு மழை தான் என்றும் அனைத்து பிரச்சனைகளும் பாக்கிய தலையில்தான் விடிகிறது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ராஜா ராணி2 சீரியலில் அம்மாவிடம் மன்னிப்பு கேட்ட சரவணன், மன்னித்து சாப்பாடு ஊட்டும் தாய். இதற்கு ரசிகர்கள் இந்த சீன் நன்றாக தான் இருக்கிறது நாளை என்ன பிரச்சினை வரப் போகிறதோ என்றும் பாசத்தை அழகாக பரிமாறிக் கொள்கிறார்கள் என்றும் கமெண்ட் செய்கின்றனர்.

ரோஜா தொடரில், பூஜா சாகப்போகிறாள் என்று அர்ஜுனுக்கு தொலைபேசியில் ஓரு செய்தி வருகிறது. அதற்கு ரசிகர்கள் பூஜாவை சீரியலில் தொடர்ந்து பார்க்கவேண்டும் சாகடிக்காதீர்கள் என்றும், ரோஜாவும் செண்பகமும் இணைந்தது மகிழ்ச்சியானது என்றும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News