2ம் பாகம் தான் எங்களுக்கு ஒரே வழி.. அருள்நிதி முதல் ஜெயம் ரவி வரை தவம் கிடக்கும் 5 ஹீரோக்களின் படங்கள்

சினிமாவில் ஒரு ஹீரோ தொடர் தோல்வி படங்களை கொடுத்தாலும் ஒரு தரமான ஹிட் படத்தின் மூலம் இந்த தோல்விகளை ஈடுகட்டி விடுவார். அப்படி தான் 5 ஐந்து ஹீரோக்கள் மாஸ் படம் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தனர். இந்நிலையில் அந்தப் படங்களின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் தற்போது உள்ளனர்.

அருள்நிதி : வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அருள்நிதி தற்போது த்ரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதற்கு அடித்தளம் போட்டது அவர் நடித்த டிமான்டே காலனி படம் தான். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தற்போது அருள்நிதி காத்துக் கிடக்கிறார்.

Also Read : இந்த விஷயத்தில் அண்ணனை தூக்கி சாப்பிட்ட தம்பி.. துல்லியமாக கையாளும் அருள்நிதி

அருண் விஜய் : கதாநாயகனாக ஜெயிக்க முடியாத அருண் விஜய் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தற்போது ஹீரோவாகவும் மாஸ் காட்டி வருகிறார். மேலும் என்னை அறிந்தால் இரண்டாம் பாகத்தில் மீண்டும் விக்டராக மிரட்ட வேண்டும் என அருண் விஜய் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

மாதவன் : ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக பெண்களின் மனதில் சிறகடித்தவர் நடிகர் மாதவன். ஆனால் அதன் பின்பு அடுத்த தலைமுறை நடிகர்கள் ஹிட் படங்களை கொடுத்து வந்ததால் இவர் பின்னுக்கு தள்ளப்பட்டார். ஆனால் விக்ரம் வேதா படம் இவரை மீண்டும் ஒரு நல்ல நடிகன் என மக்கள் மனதில் பதிய வைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மாதவன் மட்டும் இன்றி அவரது ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read : ஹிட் இயக்குனருடன் கூட்டணி போடும் மாதவன்.. 12 வருடத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் சாக்லேட் பாய்

ஜெய் : அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜெய். இந்நிலையில் இவர் ராஜா ராணி படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை தட்டி சென்றார். இவர் முழுக்க முழுக்க கதாநாயகனாக நடித்த படத்தை காட்டிலும் ராஜா ராணி படம் தான் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. இப்போது ஜெய் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் நிலையில் ராஜா ராணி 2 படத்திற்காக காத்திருக்கிறார்.

ஜெயம் ரவி : டாப் நடிகர்களின் பட்டியலில் ஜெயம் ரவி இருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மாபெரும் வெற்றி படங்களை தற்போது ஜெயம் ரவி கொடுக்கவில்லை. ஆனால் பல நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடித்த பொன்னியின் செல்வன் படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. மேலும் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தனி ஒருவன் 2 படத்திற்காக அவர் ஆர்வமாக காத்திருக்கிறார்.

Also Read : பொன்னியின் செல்வன் 2 ரிலீசுக்கு வரும் பெரும் சிக்கல்.. படாதபாடு படும் ஜெயம் ரவி, விக்ரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்