80’s முதல் இப்ப வரை கவர்ச்சிக்கு பேர் போன 6 ஹீரோயின்கள்.. எக்கு தப்பாய் விஜய்யுடன் கவர்ச்சி காட்டிய சங்கவி

சினிமாத்துறை ஆரம்பித்த காலம் முதல் இன்று வரையிலும் கவர்ச்சி, திரைப்படத்தின் ஒரு மிகப்பெரிய அங்கமாக விளங்குகிறது. அப்படி 80’களில் ஆரம்பித்து 2023 வரை கவர்ச்சிக்கு முதலிடம் கொடுத்து நடித்த டாப் 6 நடிகைகளை பற்றி பார்ப்போம். அதிலும் சங்கவி 90களில் விஜய்யுடன் எக்குத் தப்பாய் கவர்ச்சி ஆட்டம் போட்டு இளசுகளை கதி கலங்க வைத்தார்.

சில்க் ஸ்மிதா: 1970ம்  ஆண்டில் தனது  திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் சாராயம் விற்கும் பெண்ணாக அறிமுகமானார். இவருடைய பார்வை மற்றும் பேச்சே கவர்ச்சியாக இருக்கும். அந்த அளவிற்கு படங்களில் தன்னுடைய  உச்சகட்ட கவர்ச்சியை காட்டி இளசுகளை வசியம் செய்திருந்தார்.

தனது 17 வருட சினிமா அனுபவத்தில் 450 படங்களில் நடித்துள்ளது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். விஜய்யுடன் “அண்ணாமலை தீபம்” என்ற  பாடலில் இணைந்து கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். என்னதான் இவர் மண்ணை விட்டு பிரிந்தாலும் இன்றளவும் இவருக்கு இணையாக திரைதுறையில் கவர்ச்சி நாயகிகள் யாரும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஜெயமாலினி: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழி படங்களில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 80களில் இவர் முதலில் ஹிந்தியில் அறிமுகமானாலும், அதன் பிறகு தமிழில் கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறினார். ஜெயமாலினி படத்தில் இருக்கிறார் என்பதற்காகவே அந்த படத்தை திரையரங்கிற்கு சென்று கூட்டம் கூட்டமாக இளசுகள் பார்த்ததுண்டு. அந்த அளவிற்கு ஜெயமாலினி தன்னுடைய கவர்ச்சியான பார்வையால் ஆண்களை வசியம் செய்தார்.

Also Read: சில்க் ஸ்மிதாக்கு போட்டியாக வந்த கிளாமர் நடிகை.. இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து வந்த பரிதாபம்

ரஞ்சிதா:1992ல் இயக்குனர் பாரதிராஜாவின் நாடோடி தென்றல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு  மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்ஹிந்த், கர்ணன், தோழர் பாண்டியன், அமைதிப்படை, தமிழச்சி மக்களாட்சி, பெரிய மருது, சின்ன வாத்தியார் போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்து 90களில் டாப் ஹீரோயின் ஆக வலம் வந்தவர்.

சங்கவி: 1993 வெளியான அமராவதி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக இவர் அறிமுகமானார். அதன் பிறகு ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நிலவே வா போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். “ஹம்மா ஹம்மா நான் சின்ன பொண்ணு”, சில்லென சில்லென” போன்ற இரண்டு பாடல்களிலும் சங்கவி மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார்கள். சொல்லப்போனால் சங்கவி காட்டிய கவர்ச்சியினாலேயே விஜய் படங்கள்  திரையரங்குகளில் ஓடியது.

Also Read: தளபதி விஜய் லிப் கிஸ் கொடுத்த 7 நடிகைகள்.. ரொமான்டிக்கான ஹீரோ

மும்தாஜ்: “மோனிஷா என் மோனாலிசா” என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமான இவர், தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பினால் பல படங்களில் நடித்து கவர்ச்சியை காட்டியுள்ளார். இவர் குஷி படத்தில் விஜய்யுடன் ஆடிய “கட்டிபுடி கட்டிபுடிடா” பாடல் இன்றளவும் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது.

நமீதா: 2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார், அஜித், பார்த்திபன், சுந்தர் சி, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து டாப் நடிகையாக அரேபிய குதிரை போல் வலம் வந்தவர் நடிகை நமீதா. அதிலும் இவர் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் கிளாமர் தூக்கலாக நடித்திருப்பார். அந்த சமயத்தில் இவரின் நடிப்பு மற்றும் கவர்ச்சியான தோற்றத்தை திரையில் பார்ப்பதற்கென்று ரசிகர்கள் தவமாய் தவம் இருப்பார்கள். அதன்பின் திருமணம் செய்து கொண்ட நமீதா சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார்.

Also Read: சங்கவியால் கண்டபடி திட்டு வாங்கிய விஜய்.. 26 வருடம் கழித்து வெளிவந்த உண்மை

இவ்வாறு இந்த 6 நடிகைகள் தான் 80களில் இருந்து இப்போது வரை கவர்ச்சிக்கு பெயர் போன நடிகைகள். அதிலும் விஜய்யுடன் சங்கவி போட்ட கவர்ச்சி ஆட்டம் இப்போதும் இளசுகளை குதுகலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை