வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சுந்தர் சி க்கு தலைவலி கொடுத்த 4 ஹீரோக்கள்.. வரலாறு படத்திற்கு வைத்த ஆப்பு

சுந்தர் சி படம் என்றாலே பொதுவாக காமெடிக்கு பஞ்சம் இருக்காது.  இவர் இயக்கிய படங்கள் எல்லாம் நகைச்சுவையுடன் சேர்ந்து ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் படத்தை எடுப்பதில் மிகச் சிறந்த இயக்குனர். அந்த வகையில் இவர் இயக்கிய படங்களில் அருணாச்சலம் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

அப்படிப்பட்ட இயக்குனர் சமீப காலமாக ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். அதனால் இவரின் வெற்றிப்படமான அரண்மனை 4 படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் இவரின் நீண்ட நாள் கனவாக எடுக்க நினைக்கும் வரலாற்றுப் படமான சங்கமித்ரா படத்தை இயக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.

Also read: சுந்தர் சியின் அடுத்த பட டைட்டில் வெளியானது. ஸ்பைடர் மேனை மிஞ்சும் விஷாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

அதனால் இந்த படத்தின் கதையைக் கொண்டு பல ஹீரோக்களை நாடி இருக்கிறார். ஆனால் அவர்கள் இந்த படத்திற்கு நேரம், காலம் அதிகமாக செலவழிக்க வேண்டும். அதனால் எங்களால் முடியாது என்று நிராகரித்து விட்டார்கள். அத்துடன் சுந்தர் சி கூறிய கதைப்படி இந்தப் படத்திற்கு நீண்ட முடிகள் வளர்க்க வேண்டும் அதனால் எங்களுக்கு மற்ற படங்கள் பாலாகி விடும் என்று நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள்.

மேலும் சுந்தர் சி இந்தப் படத்தில் மூன்று ஹீரோக்களை அதிகமாக நம்பி இருந்தார். அவர்கள் இந்த படத்தில் கண்டிப்பாக நடிப்பார்கள் என்று அவர்களிடமும் போய் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் மூன்று பேரும் பேசி வைத்த மாதிரி ஒரே பதிலாக நோ என்று சொல்லிவிட்டார்கள். இதனை அடுத்து ஜெயம் ரவி, விஷால், பிரகாஷ்ராஜ் மற்றும் நவரச நாயகன் கார்த்திக் இவர்களும் சங்கமித்ரா படத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டார்கள்.

Also read: செக்க சிவந்த வானம் கனெக்ஷனுடன் வெளியானது சிம்பு – சுந்தர் சி இணையும் பட டைட்டில். பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளே.

இதனால் தொடர்ந்து இவர் வரலாற்று மிக்க கனவு படமான படத்தை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறார். ஆனாலும் இந்த படத்தை எப்படியாவது இயக்கி மிகப் பிரம்மாண்டமான இயக்குனர் என்று பெயரை எடுக்க வேண்டும் என்று முழு முயற்சியுடன் ஹீரோக்களை சல்லடை போட்டு தேடி வருகிறார்.

ஆனால் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் இப்படத்திற்கு நோ சொல்லிவிட்டார்கள். இப்பொழுது சுந்தர் சி என்ன செய்வது என்று தெரியாமல் வேறு மொழியில் இருந்து ஹீரோவை தேடிக் கொண்டிருக்கிறார். அங்குள்ள ஹீரோ யாராவது இந்த படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்கிறார்களா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். கடைசியில் இவர் நிலைமை இப்படியாகிவிட்டதே.

Also read: சுந்தர் சி-யின் தொடர் தோல்வி, அடுத்த பட கூட்டணியில் இருந்து விலகிய ஹீரோ.. வாட்டி வதைக்கும் கெட்ட நேரம்

- Advertisement -

Trending News