வெறும் வன்முறையை வைத்து ஜெயித்த 5 படங்கள்.. உச்சகட்ட வெறியில் அர்ஜுன் நடிக்கும் படம்

 Five Successful Films With Violent Scenes: சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் வன்முறை காட்சி அதிகமாக இடம்பெற்று வருகிறது. ஒரு காலத்தில் படத்தில் சில காட்சிகள் மட்டுமே வன்முறை இடம்பெற்ற நிலையில் இப்போது வெறும் வன்முறையை வைத்து படங்கள் எடுத்துள்ளனர். அவ்வாறு உள்ள ஐந்து படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

உறியடி : விஜயகுமார் இயக்கி, நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் உறியடி. விளையாட்டுத் தனத்துடன் முரட்டு சுபாவம் கொண்ட கல்லூரி நண்பர்கள் ஒரு இக்கட்டான பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்கள். ஜாதி அரசியலை வைத்து காசு பாக்க நினைக்கும் சுயநலத்தால் நடக்கும் வன்முறை தான் உறியடி.

Also Read : 99.9% உறுதி ஆயிடுச்சு.. சிஷ்யனுக்காக களமிறங்கிய கமல், லியோ செய்யப் போகும் சம்பவம்

ஆரண்ய காண்டம் : தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆரண்ய காண்டம். இந்த படமும் ரத்தம் தெறிக்க முழுக்க முழுக்க வன்முறை காட்சிகள் தான் இடம் பெற்றிருந்தது. ஆனாலும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடினார்கள்.

கைதி : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆக்சன் காட்சிகள் தான் இடம்பெற்றிருந்தது. கதாநாயகி, பாடல் என எதுவுமே என்டர்டைன்மென்ட் படுத்தும் விதமாக இல்லை என்றாலும் வன்முறையை வைத்து வெற்றி பெற்றது.

Also Read : ஓடிடி-க்கு வரும் ஜெயிலர்.. கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம், ரிலீஸ் தேதி எப்ப தெரியுமா?

விக்ரம் : கமல், லோகேஷ் கூட்டணியில் உருவாகி இருந்த படம் தான் விக்ரம். மல்டி ஸ்டார் படமாக உருவாகி இருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாஸில் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர் இந்த படம் மிகப்பெரிய வசூலை கொடுத்தாலும் வன்முறையை முழுக்க வைத்து தான் வெற்றி கண்டது.

ஜெயிலர் : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்தப் படம் குடும்ப செண்டிமெண்ட் கதையை தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும் குழந்தைகள் பார்க்க கூடாத சில காட்சிகளையும் நெல்சன் வைத்திருந்தார். தியேட்டரில் பார்க்கும்போது நெஞ்சையே பதப்பதைக்க வைத்திருந்தது.

அடுத்ததாக லோகேஷின் லியோ படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அர்ஜுனின் பிறந்தநாள் அன்று ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதிலும் ஒருவரை ரத்தம் சொட்ட சொட்ட சுத்தியலால் அடிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருப்பதை பார்க்கும்போது மிகவும் வன்முறை காட்சிகள் இடம் பெற்று இருப்பது தெரிய வருகிறது.

Also Read : ஜெயிலரின் வெற்றியை மறக்கடிக்க களமிறங்கும் லியோ.. லோகேஷ்-க்கு தளபதி போட்டோ ஆர்டர்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்