புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அதிகமாய் செகண்ட் பார்ட் நடித்த 5 ஹீரோக்கள்.. அரைச்ச மாவையே அரைத்த ராகவா லாரன்ஸ்

பொதுவாகவே ஹீரோக்கள் பல படங்களில் நடித்து வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள். அத்துடன் இவர்கள் நடித்து பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமான படத்தை எடுத்து அதனுடைய இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று அதில் நடித்து வெற்றியும் பெற்று வருகிறார்கள். அப்படி எந்த ஹீரோக்கள் செகண்ட் பார்ட்டில் நடித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

சுந்தர் சி: இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர். இவர் இயக்கிய படங்கள் ஆன முறை மாமன், அருணாச்சலம், தலைநகரம் போன்ற படங்களை தொடர்ந்து அதிகமான வெற்றி படங்களை கொடுத்து வந்தார். பின்பு 2014 ஆம் ஆண்டு வெளிவந்த அரண்மனை படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து இரண்டாம் பாகம் அடுத்த வருடமே வெளியிட்டார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. பின்பு இவர் இயக்கி வந்த படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பதால் மறுபடியும் இந்த படத்தையே மூன்றாம் பாகம் என்று எடுத்து அரண்மனை 3 என்று 2021 ஆம் ஆண்டு வெளியிட்டார். இப்பொழுது மறுபடியும் அரண்மனை 4 மற்றும் தலைநகரம் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Also read: சுந்தர் சியின் அடுத்த பட டைட்டில் வெளியானது. ஸ்பைடர் மேனை மிஞ்சும் விஷாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சூர்யா: தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கக் கூடியவர். இவர் அறிமுகமான நேருக்கு நேர் படத்தின் மூலம் அதிக அளவில் வசூல் சாதனையை பார்த்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பெரியண்ணா, உயிரிலே கலந்தது, நந்தா, பிதாமகன், பேரழகன், கஜினி போன்ற படங்களை தொடர்ந்து நடித்து வந்தார். பின்பு 2010 ஆம் ஆண்டு சிங்கம் திரைப்படம் இவருக்கு 25வது திரைப்படமாக வெளிவந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சிங்கம் 2 சிங்கம் 3 என்று நடித்து செகண்ட் பார்ட்டுக்கு பிள்ளையார் சுழி போட்டதே இவர்தான் என்று சொல்லலாம்.

கமல்: இவர் நடிப்பு, நடனம், பாட்டு, இயக்கம் என அனைத்திலும் நினைத்ததை செய்து முடிக்கும் சகலகலா வல்லவர். இவர் பல சாதனைகளை நடிப்பின் மூலம் காட்டியுள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பின்பு இவர் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு விஸ்வரூபம் திரைப்படம் வெளிவந்தது. இதனை அடுத்து இதனுடைய இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம் 2 என்று வெளியானது. இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டு கிடைத்தது.

Also read: அடுத்து ஆஸ்கர் கதவை தட்டப்போகும் படம்.. உலகநாயகன் செய்யப்போகும் வரலாறு

பருத்திவீரன் கார்த்தி: இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இவருடைய எதார்த்தமான நடிப்பும் துணிச்சலான பேச்சும் அதிக அளவில் இவருக்கு கை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, பிரியாணி, மெட்ராஸ், பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. இதற்கு அடுத்து சர்தார் இரண்டாம் பாகத்திலும் நடிக்கப் போகிறார்.

ராகவா லாரன்ஸ்: டான்ஸ் மாஸ்டராக இவரது வாழ்க்கையை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய படங்களான மாஸ், ஸ்டைல், முனி போற்ற வெற்றி படங்களை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு காஞ்சனா திரைப்படம் வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சனா 2 காஞ்சனா 3 போன்ற பேய் படங்களை இயக்கி இவரை நடித்தார். ஆனால் இந்தப் படங்கள் அனைத்தும் அரைச்ச மாவை அரைப்பது போலவே ஒரே மாதிரியாக இருந்தது.

Also read: சூர்யா, தனுசை பொசுக்குனு டம்மியாக்கிய ராகவா லாரன்ஸ்.. எல்லாம் பேய் ராசி!

- Advertisement -

Trending News