நாளைய இயக்குனர்கள் மூலம் வளர்ந்த 5 பெரிய இயக்குனர்கள்.. முதல் படத்திலேயே மிரட்டி விட்ட கார்த்திக் சுப்புராஜ்

பொதுவாக சில இயக்குனர்கள் திறமைகள் இருந்தும் அதை வெளிக்கொண்டு வருவதற்கு சரியான மேடை கிடைக்காமல் போராடி வருகிறார்கள். ஆனால் சிலர்  பொது நிகழ்ச்சியின் மூலம் தங்களது திறமைகளை குறும்படத்தின் மூலம் வெளிகாட்டி இப்பொழுது பெரிய இயக்குனர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்களை பற்றி நாம் பார்க்கலாம்.

கார்த்திக் சுப்புராஜ்: இளம் இயக்குனர்களில் ஒருவராக கார்த்திக் சுப்புராஜுக்கு ரசிகர்களுக்கிடையே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வருகிறார். இப்பொழுது முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் இந்த நிலைமைக்கு வருவதற்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குனர்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று அதில் வெற்றி பெற்றார். அதன்மூலம் இவரின் முதல் படமான பீட்சா படத்தை இயக்கி வெற்றி படமாக கொடுத்தார்.

Also read: ஜிகிர்தண்டா 2 அசால்ட் சேதுவாக நடிக்கப் போகும் மாஸ் ஹீரோ.. மரண அப்டேட் வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்

மணிகண்டன்: இவர் முதலில் குறும்படங்களுக்கு வசனம் எழுதி பின்பு நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று விண்ட் என்ற குறும்படத்தின் மூலம் அதிகமான பாராட்டுகளை பெற்றார். அதன்பின் இயக்குனராக காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் மூலம் அவருக்கு நிறைய விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தது.

அருண்குமார்: நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் அருண்குமார் பங்கேற்றார். அதில் ஒரு குறும்படத்தை இயக்கி நடித்து இருப்பார். அதற்காக அங்கிருந்த நடுவர்களிடமிருந்து பாராட்டை பெற்றார். பின்பு அதற்கு அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக வெள்ளிதிரைக்கு வந்து ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படம் தான் பண்ணையாரும் பத்மினியும். இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கதையை கொண்டு வந்து ரசிகர்களிடம் இருந்து அதிக பாராட்டு கிடைத்தது.

Also read: விஜய் சேதுபதி, விஷால் நம்பி ஏமாற்றமடைந்த கார்த்திக் சுப்புராஜ்.! அதிரடியாக எடுத்த முடிவு

நலன் குமாரசாமி: இவர் கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்று குறும்படங்கள் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தார். அதன் பின் சில திரைப்படத்தை இயக்க ஆரம்பித்தார். அப்படி இவர் இயக்கிய சூது கவ்வும் திரைப்படம் வெற்றி படமாக மாறியது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் படமாக ஆனது.

பாலாஜி: இவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கி அதிகமான அளவில் பாராட்டுகளை பெற்றார். பின்பு வெள்ளிதிரைக்கு வந்து 2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் சிறந்த அறிமுக இயக்குனருக்கான சைமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Also read: பைத்தியக்காரத்தனமாக செயல்படும் கார்த்திக் சுப்புராஜ்.. இது என்னடா புது டிரெண்டா இருக்கு

Next Story

- Advertisement -