பள்ளி கல்லூரியை ஞாபகப்படுத்தும் 5 பிரண்ட்ஷிப் பாடல்கள்.. புது ட்ரெண்டை உருவாக்கிய முஸ்தபா

எவ்வளவு படங்கள் எந்த மாதிரி கதையை கொண்டு வந்திருந்தாலும் அந்தப் படத்தில் மறக்க முடியாத பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையை ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்திருந்தால் அதை பார்ப்பதற்கே ஒரு தனி சுகம் தான். அதிலும் அதில் ஒரு பிரண்ட்ஷிப் சாங்ஸ் வைத்திருந்தால் போதுமே நம்மளை அப்படியே மெய்சிலிர்க்க வைத்து கல்லூரி வாழ்க்கையே நினைவுபடுத்தும். அப்படிப்பட்ட பிரண்ட்ஷிப் பாடல்களை பற்றி பார்க்கலாம்.

ஏப்ரல் மாதத்தில்: எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஸ்ரீகாந்த், சினேகா, காயத்ரி ஜெயராம், வெங்கட் பிரபு மற்றும் கருணாஸ் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தின் கதையானது கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவர்களின் நட்பை எடுத்துச் சொல்வதன் மூலம் அவர்கள் கல்லூரி வாழ்க்கை முடிவடையும் போது அவர்கள் ஒவ்வொருவரும் உணர்வுபூர்வமான நட்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். அதற்கான ஒரு பாடல் தான் “மனசே மனசே மனசில் பாரம் நண்பர் கூட்டம் பிரியும் நேரம் இந்த பூமியில் உள்ள சொந்தங்கள் எல்லாம் ஏதேதோ எதிர்ப்பார்க்குமே இந்த கல்லூரி சொந்தம் இது மட்டும் தானே நட்பினை எதிர்பார்க்குமே”. 90ஸ் கிட்ஸ் கேட்டு அழ வைத்த பாடல். இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

Also read: உலக அழகிகளுக்கே டப் கொடுக்கும் நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா.. வேற லெவல் அழகு!

நண்பன்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு நண்பன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் மூன்று பேரின் பிரண்ட்ஷிப்பை வைத்து அவர்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை படமாக எடுக்கப்பட்டிருக்கும். இதில் வரும் “நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணம் நினைகின்றதா மற்றும் என் ஃப்ரெண்ட்டா போல யாரு மச்சான்” இப்படிப்பட்ட பாடல்களை கேட்கும் போது எந்த காலத்திலும் நண்பர்களை மட்டும் இழந்து விடக்கூடாது என்று நினைக்கும் அளவிற்கு இருக்கும்.

பட்டாளம்: ரோஹன் கிருஷ்ணா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு பட்டாளம் திரைப்படம் வெளிவந்தது. இதில் நதியா, இர்பான், யுதன் பாலாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பள்ளியில் படிக்கும் நான்கு நண்பர்களைக் கொண்டு இரண்டு குழுவாக பிரிந்து அவர்கள் ஏற்படும் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் வரும் “எங்கோ பிறந்தோம் இங்கே இணைந்தோம் ஒன்றாய் வளர்ந்தோம் உலகை உணர்ந்தோம் எல்லாம் அறிந்தோம் அன்பால் கலந்தோம் நட்பால் மறந்தோம்” இந்தப் பாடல் மூலம் நம்முடைய பள்ளி வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைக்கிறது.

Also read: மொத்த பேர் கண்ணிலையும் மண்ணைத் தூவிய லோகேஷ்.. மும்பையில் இருந்து ரகசியமாய் ஊடுருவிய வில்லன்

நினைத்தாலே இனிக்கும்: ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் வெளிவந்தது. இதில் பிரித்விராஜ், சக்தி வாசு மற்றும் பிரியாமணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கல்லூரியில் இருக்கும் நண்பர்களிடையே உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். இதில் வரும் பிரண்ட்ஷிப் பாடல் “நண்பனை பார்த்த தேதி மட்டும் ஒட்டி கொண்டது என் ஞபகதில் என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்” இந்தப் பாடலை கேட்கும் போது நம்மளை அப்படியே கல்லூரி வாழ்க்கைக்கு அழைத்து சென்று கண்ணீரை வரவழைக்கும் அப்படிப்பட்ட ஒரு மிகச் சிறந்த பாடல்.

காதல் தேசம்: கதிர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் திரைப்படம் வெளிவந்தது. இதில் வினீத், அப்பாஸ், தபு, எஸ்பிபி மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் இரண்டு நண்பர்களுக்கு இடையே உருவாகும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் இவர்களுக்கு இடையே இருக்கும் நட்பை அழகாக உணரும் படி பாடல் மூலமாக கொடுத்திருப்பார். “முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா” இப்பாடல் 90ஸ் கிட்ஸ்க்கு புது ட்ரெண்டை உருவாக்கியது.

Also read:  அப்பாஸ் இப்போது என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் தெரியுமா? அவரே கூறிய பதில்