சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த 5 படங்கள்.. அப்பவே பட்டைய கிளப்பிய தளபதி

விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களில் அப்பவே பட்டையை கிளப்பி நடித்திருப்பார். அதிலும் அவர் நடித்த படங்களை இப்பொழுது பார்க்கும் போது நம்மளை அறியாமலேயே மெய்மறக்க செய்கிறது. அந்த அளவிற்கு நடிப்பை எதார்த்தமாக உள்வாங்கி நடித்திருப்பார். முக்கியமாக அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களில் ஹீரோவுக்கு பெயர் விஜய் ஆகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.

வெற்றி: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெற்றி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், விஜி, அனுராதா மற்றும் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்திருப்பார். இப்படத்தில் விஜயகாந்த் பிளாஷ்பேக் காட்சியில் அவருடைய சின்ன வயது கதாபாத்திரத்திற்கு விஜய் தான் நடித்திருக்கிறார். இப்படம் தான் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம். இவருடைய முதல் படத்திலேயே சீரியஸான கேரக்டரில் நடித்திருப்பார்.

Also read: ரோலக்ஸை ஓவர்டேக் செய்ய லியோவில் களமிறங்கும் தனுஷ்.. மிரட்ட வரும் லோகேஷ்

குடும்பம்: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு குடும்பம் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ஜெய்சங்கர் மற்றும் சுஜாதா ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் விஜய் நாரதர் கேரக்டரில் நடித்திருப்பார். அதாவது ஒரு நாடக மேடையில் ஒரு கூத்து அரங்கேறும் போது அதில் நாரதராக பாட்டுப்பாடி நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

நான் சிகப்பு மனிதன்: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு நான் சிகப்பு மனிதன் திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினிகாந்த்,  பாக்யராஜ், அம்பிகா, சத்யராஜ் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தில் விஜய், ஆரம்பப் பாடலில் சமூக செய்தி பலகையை கையில் வைத்துக்கொண்டு வருவார். அந்த காட்சியில் அவருடைய ரியாக்ஷன் வேற லெவல்ல கொடுத்திருப்பாரு.

Also read: விஜய் பட வில்லனுக்கு வந்த பகிரங்க மிரட்டல்.. அந்தரங்க வீடியோவை வெளியிடுவது உறுதி

வசந்த ராகம்: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வசந்த ராகம் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ரகுமான், சுதா சந்திரன் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் ஆகியோர் நடித்திருப்பார்கள். இதில் விஜயகாந்துக்கு சின்ன வயது கேரக்டருக்கு விஜய் நடித்திருப்பார். அப்பவே நம்ம இளையதளபதி சின்ன வயது காதலை அழகாக வெளிக்காட்டி நடித்திருப்பார். அதிலும் அவர் நடித்த ஒவ்வொரு சீனும் பார்ப்பவர்களை மெய் மறக்க செய்கிறது. அந்த அளவுக்கு எதார்த்தமாக நடித்திருப்பார்.

சட்டம் ஒரு விளையாட்டு: எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு சட்டம் ஒரு விளையாட்டு திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜயகாந்த், ராதா மற்றும் ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜயகாந்துக்கு சின்ன வயது கதாபாத்திரத்திற்கு விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

Also read: விஜய் உடன் மோதிப் பார்க்க நாள் குறித்த பா ரஞ்சித்.. செகண்ட் இன்னிங்ஸ் தொடங்க போகும் விக்ரம்

- Advertisement -

Trending News