பார்வையற்றவராக நடித்து பிரமிக்க வைத்த 5 நடிகைகள்.. குக்கூ படத்தில் கண்கலங்க செய்த மாளவிகா நாயர்

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் மனதை பெரிய அளவில் கவர்ந்த சில நடிகைகள். அந்த நடிகைகள் படத்தில் பார்வையற்றவர்களாக நடித்து கண்கலங்க செய்த கதாபாத்திரங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

பூஜா: பாலா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு “நான் கடவுள்” அதிரடி திரைப்படமாக வெளிவந்தது. இதில் ஆர்யா மற்றும் பூஜா நடித்தனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் பூஜா ஒரு பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் பூஜாவின் கண்களில் வைட் கலர் லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கும் அது நிஜமாகவே பார்வை தெரியாது. இதனை அடுத்து அது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதை எப்பொழுதுமே கண்களில் மாட்டிக் கொண்டு தான் இருந்திருக்கிறார். அது அங்கு இருந்த சில பேருக்கு உண்மையாகவே இவருக்கு கண் தெரியாது என்று நினைத்து தானம் கூட செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எதார்த்தத்துடன் நடித்து இருப்பார். இந்த கதாபாத்திரத்திற்காக பூஜாவுக்கு சிறந்த நடிகை என்ற விருது கிடைத்தது.

Also read: பாலா மீது அஜித்துக்கு கோபம் வரக் காரணம் இதுதானாம்.. நான் கடவுள் பஞ்சாயத்தை விளக்கிய தயாரிப்பாளர்

ஜோதிகா: சசி சங்கர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான “பேரழகன்” திரைப்படம். இப்படத்தில் சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்கள். இதில் ஜோதிகா பார்வையற்றவராக செண்பகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நடிப்பின் நாயகி என்ற பெயர் வாங்கிய ஜோதிகா இந்த கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

ரேவதி: முதன் முதலில் இயக்குனராக அறிமுகமாகிய நாசர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு “அவதாரம்” திரைப்படம் வெளியானது. இதில் நாசர் மற்றும் ரேவதி நடித்தனர். இப்படம் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை நம்பகத் தன்மையுடன் எதார்த்தத்துடன் சித்தரிக்கப்பட்டு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இதில் வரும் “தென்றல் வந்து தீண்டும்போது” என்ற பாடல் இந்தக் காலத்து வரைக்கும் ரசிகர்களின் மனதை வருடும் பாடலாக அமைந்து வருகிறது. இதில் கண் தெரியாதவர்களின் நிலைமையை எதார்த்தத்துடன் ரேவதி நடித்துக் காட்டி இருப்பார்.

Also read: வயிறு குலுங்க சிரிக்க வைத்த டி.பி.கஜேந்திரன் நடித்த 6 படங்கள்.. குள்ள சினேகாவின் தந்தையாக அடித்த லூட்டி

நயன்தாரா: மிலிந்த் ராவ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு “நெற்றிக்கண்” க்ரைம் திரில்லர் திரைப்படமாக வெளிவந்தது. இதில் நயன்தாரா, அஜ்மல் அமீர் ஆகியோர் நடித்தனர். இதில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்திருப்பார். இத்திரைப்படம் தொடர் கொலையாளியை தேடும் பார்வையற்ற போலீஸ் அதிகாரியை மையமாகக் கொண்ட திரைப்படமாக அமைந்திருக்கும். இதில் நயன்தாரா பார்வையற்றவராக இருந்தாலும், மிகவும் தைரியமாகவும் அத்துடன் பார்வையற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் நடித்திருப்பார்.

மாளவிகா நாயர்: ராஜ முருகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு “குக்கூ” திரைப்படம் காதல் உணர்வோடு வெளிவந்தது. இப்படத்தில் தினேஷ் மற்றும் மாளவிகா நாயர் நடித்தனர். இதில் இவர்கள் இருவருமே பார்வையற்றவர்களாக நடித்திருப்பார்கள். இவர்கள் பார்வையற்றவர்களாக இருந்தாலும் இவர்களுக்குள் ஒரு காதல் உணர்வு ஏற்பட்டு அதை எதார்த்தமாக நடித்து வெளிக்காட்டிருப்பார். உண்மை காதல் என்றுமே தோற்காது என்ற எடுத்துக்காட்டுக்கு இந்த படம் சமர்ப்பணம். இப்படம் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வர வைக்குற அளவுக்கு இப்படத்தில் மாளவிகா நாயர் தத்ரூபமாக நடித்திருப்பார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது.

Also read: பிளாட்பாரத்திற்கு வந்த குக்கூ பட பிரபலம்.. வறுமையால் பிச்சை எடுக்கும் அவலம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்