விஜய்யின் உடன்பிறப்பாக நடித்த 5 நடிகர்கள்.. அண்ணன், தம்பியாக நடித்து தளபதிக்கு வில்லனான பிரபலங்கள்

Actor Vijay: விஜய்யின் படங்களில் நடித்த பல பிரபலங்கள் இப்போது சினிமாவில் நல்ல இடத்தில் இருக்கிறார்கள். அவ்வாறு சில படங்களில் விஜய்க்கு அண்ணன் மற்றும் தம்பிகளாக சில நடிகர்கள் நடித்துள்ளார்கள். அதன் பிறகு அதில் சிலர் தளபதிக்கு வில்லனாகவே நடித்துள்ளனர். அப்படி விஜய்க்கு சகோதரர்களாக நடித்த 5 நடிகர்களை இப்போது பார்க்கலாம்.

ஜெய் : இவரின் சினிமா கேரியரே விஜய்யின் படத்தின் மூலம் தான் தொடங்கியது. அதாவது தளபதி நடிப்பில் வெளியான பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக ஜெய் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடித்த போது உண்மையாகவே விஜய்யின் தம்பி ஜெய் என பலரும் நம்பி இருந்தனர். அந்த அளவுக்கு அவரின் சாயலில் பக்காவாக ஜெய்க்கு பொருந்தி இருந்தது.

Also Read : விஜய்யுடன் ஜோடி போட்டு மறக்க முடியாத 7 நடிகைகள்.. ஒரு கிஸ் சீன் கூட இல்லாமல் காதலில் உருக வைத்த ஷாலினி

பிரகாஷ்ராஜ் : கில்லி படத்தில் விஜய்க்கு சரியான டஃப் கொடுத்திருப்பார் பிரகாஷ்ராஜ். அந்தப் படத்திற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து வாரிசு படத்தில் மீண்டும் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். ஆனால் இவர்கள் இருவரும் அண்ணன், தம்பியாக சிவகாசி படத்தில் நடித்திருந்தனர்.

ஷ்யாம் : கதாநாயகனாக பல படங்களில் நடித்த ஷ்யாம் இப்போது வாய்ப்பு இல்லாமல் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படத்தில் அவருக்கு அண்ணனாக ஷ்யாம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : பாசமா வளத்தானா பச்சைக்கிளி, கொத்திட்டு போச்சாம் வெட்டுக்கிளி.. விஜய்யின் லியோவால் கடுப்பில் இருக்கும் பெரும் முதலாளி

மகத் : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மகத். இப்போது ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் சூப்பர் ஹிட் படமான ஜில்லா படத்தில் தளபதிக்கு தம்பியாக நடித்து மகத் அசத்தி இருப்பார்.

மகேந்திரன் : குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் அசத்திய மகேந்திரன் விஜய்யின் மின்சார கண்ணா படத்தில் அவருக்கு தம்பியாக நடித்திருந்தார். இந்நிலையில் பல வருடம் கழித்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரம் பவானியாக மகேந்திரன் நடித்திருந்தார்.

Also Read : அஜித் ரசிகர் என்று சொன்னதால் மறுக்கப்பட்ட பட வாய்ப்பு.. ஒரே படத்தோடு தலைமுழுகிய விஜய்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்