பாசமா வளத்தானா பச்சைக்கிளி, கொத்திட்டு போச்சாம் வெட்டுக்கிளி.. விஜய்யின் லியோவால் கடுப்பில் இருக்கும் பெரும் முதலாளி

Leo Vijay: விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த சூழலில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி முதல் பாடல் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த நாளில் இருபது நிமிட வீடியோ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என லோகேஷ் கூறியிருக்கிறார்.

மேலும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு லியோ படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஜூன் மாதத்துடன் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் பின்னணி வேலைகளை லோகேஷ் தொடங்க இருக்கிறார். இவ்வாறு லியோ ரிலீஸுக்காக படக்குழு ஆயத்தமாகி கொண்டிருக்கும் நிலையில் புதிய பிரச்சனை ஒன்று உருவாகி இருக்கிறது.

Also Read : அஜித் ரசிகர் என்று சொன்னதால் மறுக்கப்பட்ட பட வாய்ப்பு.. ஒரே படத்தோடு தலைமுழுகிய விஜய்

அதாவது ஆரம்பத்தில் லியோ என்ற டைட்டிலே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. சிம்ம ராசியை ஆங்கிலத்தில் லியோ என்று குறிப்பிடுவதால் அதில் சிங்கம் உள்ளது போல லியோ படத்தில் இடம்பெறுவதாக செய்திகள் வெளியானது. இந்த சூழலில் பிரபல காப்பி நிறுவனமான லியோ டைட்டில் உரிமை தங்களிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

லியோ காப்பி நிறுவனத்தின் உரிமையாளர் வேணு சீனிவாசன் இந்தப் பெயரின் காப்புரிமை தங்களிடம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் தங்களிடம் அனுமதி வாங்காமல் லியோ டைட்டிலை பயன்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார். இதனால் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற பதட்டத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : மீண்டும் வெடிக்கும் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் பிரச்சனை.. விஜய்க்கு போட்டியாக கமலை இழந்து விடும் திரையுலகம்

பாசமா வளத்தானா பச்சைக்கிளி, கொத்திட்டு போச்சாம் வெட்டுக்கிளி என்பது போல இவ்வளவு வருடமாக காபி நிறுவனத்திற்கு லியோ என்று பெயர் இருந்தாலும் லோகேஷ் அதை பயன்படுத்திய பிறகு தான் மிகவும் பிரபலமாக உள்ளது. இதனால் அந்நிறுவனம் விஜய்யின் படத்திற்கு லியோ வைத்ததே ப்ரோமோஷன் ஆக நினைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் அதற்கு நேர் எதிராக இவ்வாறு பிரச்சனை செய்வது தேவையில்லாத ஒன்று என பலரும் கருத்து கூறி வருகிறார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் எப்படி சமாளிப்பது என்று லோகேஷுக்கு நன்கு தெரியும். ஆகையால் எப்படியும் டைட்டிலை லோகேஷ் விட்டுக் கொடுக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட விஜய்.. பதறிப் போய் கூட்டணி போட வந்த முக்கிய கட்சிகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்